தமிழ்க்குடில் நடத்தும் தமிழர் விளையாட்டு விழா

  அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நடத்தபடும் விளையாட்டுப் போட்டிகள்: 1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 3. அறிவுசார்ந்த…

நினைவுமேடைத் திறப்பும் நினைவேந்தலும்

அம்மையார் தாமரை பெருஞ்சித்திரனார், புலவர் இறைக்குருவனார் ஆகியோரது நினைவுமேடைத் திறப்பும், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்,சென்னை மேடவாக்கம்,பாவலரேறு தமிழ்க்களத்தில்  மார்கழி7, 2044/ திசம்பர்12, 2013 ஞாயிறன்று நடைபெற்றன.

திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு

  கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும்  கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன்.  இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது.   தமிழக மக்களின் பழங்கலைகளில்,  கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை.   திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி  இணையரின் மகனாவார்; சென்னை…

பாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும்

       பாவேந்தர் பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.  இயற்கையைப் போற்றும் வகையில், குளிர்காலத்தை வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.  4, 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.           மாணவர் அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு போட்டியை நடத்தினர்.   போட்டியில் வெற்றிபெற்றோர்       ச.மோ. துர்கா, தே.ரா. தினேசு, வா.சி. யாமின், வ.கு. சந்தோசு, அ.இ. மணிகண்டன் ஆகிய மாணவர்களுக்கு வெற்றிப்…

மத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின்  முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில்,  கட்சியின் பொதுச் செயலாளர்  செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது. செங்கோட்டையே இலக்கு! பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர்  செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி…

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4

( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…

ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்

காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம். மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத்…

திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா

  பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…

தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது

– செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.இராமசாமி கருத்துரையாற்றினார்.  அப்பொழுது அவர், “தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றிக்…