‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்

‘அகம்’ என்றால் என்ன?   ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப்…

சங்க இலக்கியங்கள் உளவியல் இலக்கியங்களாகும் – தமிழண்ணல்

  சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டு என்று கேட்டால், தயங்காமல், ‘உளவியல் இலக்கியம்’ எனக் குறிப்பிடலாம். அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறும், புறத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு எழுத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும். ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமே அல்லது அம்மனநிலை விளைவுக்குரிய சூழலை மட்டுமே அவை பாடுபொருளாய்க் கொண்டவை. எனவே உளவியற் கொள்கைகளையும் பிராய்டு, (இ)யங்கு, என்பாரின், பாலியல், உளவியற் ஆய்வுகளையும் கற்றுணர்ந்தால் சங்க இலக்கியக் கல்விக்கு அது பெரிதும் துணைபுரியும். – தமிழ்ச் செம்மல் தமிழண்ணல்: சங்க இலக்கிய ஒப்பீடு: பக்கம்….

அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை – சேலம் செயலட்சுமி

அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை என்பதைச் சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன.   சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு துறைச் செய்திகள் பிறநாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தாவர இயல், விலங்கியல், நிலங்களின் பிரிவுகள், இசை நுணுக்கங்கள், ஆடற் கலைகள், முத்து, வைரம், வைடூரியம் பற்றிய உண்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, கணிதம், வானநிலை சாத்திரம், கடற்பயணங்கள் ஆகிய எந்தக் கலையிலும் அறிவியல் துறையிலும் தமிழர் பின்தங்கியதாகத் தெரியவில்லை. சங்க நூல்களைத் தெளிவாக ஆராய்ந்தால் இப்படிப் பல உண்மைகள் வெளிவருகின்றன. – இசைப்பேரரசி முனைவர் சேலம் செயலட்சுமி: தமிழிசை…

சங்க நூல்கள் வரலாற்று நூல்களே!

  சங்க நூற்களில் பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளை உள்ளவாறுணரலாம். நிலவியல்பால் பல நலங்குகளைக் காணலாம். சிற்றுயிர் வாழ்க்கைகளை உற்று நோக்குவதால் மாந்தர் கற்றுக் குற்ற நீங்கிக் குணங்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டிய பல வாய்மைகளை உணரலாம். குறிப்பிற் புலப்படுத்தும் அறமுறைகள் அளவில்லன அறியலாம். இவற்றிற்கு உள்ளுறையுவமம் எனப் பெயர்ந்து உள்ளுதோறுள்ள முவக்குமாறு உள்ளியுணர வைத்தனர் ஆன்றோர். இவ்வுள்ளுறையினைக் கொண்டு கள்ளங் கபடொழிந்து வெள்ளையுள்ளத்தராய் வள்ளன்மையோடு வாழலாம். மேலும் பண்டைமாந்தர், புலவர், புரவலர், குறுநிலமன்னர், முடியுடை வேந்தர், ஆண்மை, அடக்கம், ஆள்வினையுடைமை, உழவு, வணிகம், அறமுறை…

வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!   வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட்…

பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுவோம்! – ஔவை துரைசாமி

  இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலை மடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிற நாட்டார் தலை வணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையீறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும்…

சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா

  சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே…

சங்கத்தில் மிகுதியான பெண்பாற்புலவர்கள் இருந்தனர் – சேலம் செயலட்சுமி

  சங்கத்தில் மிகப்பல பெண்பாற்புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது மிக்க வியப்பிற்குரியது. இவர்கள் பல்வேறு குலத்தொழில் உடையவர்களாகவும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களாகவும் இருப்பது அதனிலும் அதிசயத்திற்குரியது. அக்காலத்தில் தொழிலையொட்டியே சமுதாயம் வகுக்கப்பட்டிருந்தது. என்றும், பிற்காலத்தில் சாதி வேறுபாடுகள் தோன்றின என்றும் தோன்றுகிறது. இயற் புலவர்கள் இசைப்புலவர்கள், நடனப் பெண்கள் ஆகியோர் அரசு குடும்பத்திலும் இருந்தனர். எளிய தொழிலாளிகள் இல்லத்திலும் தோன்றினர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்புக்கொண்டு என்ற சங்க காலப் பெண்புலவர் பாண்டியனின் அரசமாதேவி; ஆதிமந்தி என்பாள் சோழ மன்னனின் திருமகள்; நடனத்தில் வல்லவளாக அவள்…

உலக அமைதியை நிலைநாட்டத் துணைசெய்வன சங்க இலக்கியங்களே!

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள் சங்கமாகக் கூடித் தமிழைப் போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொலை நூல்களைக் கொண்டது. இவை, படிப்போர் உள்ளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் பொருள்வகையானும் திணை வகையானும் பாவகையானும் அடி வகையானும் பகுத்துத் தொகுத்தனர் நம் முன்னர்.  இவற்றை இயற்றிய புலவர்களின் பெயர் தெரிந்தவர் நானூற்று எழுபத்து மூவர். பெயர் தெரியாதவர்களும் சிலர் உளர்….

சங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர்

  ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ்வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாகும். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர்மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். – க. வெள்ளைவாரணர்…

சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்

சங்காலப் பாடல்கள் கற்பனை ஆதிக்கம் கொண்டவை அல்ல. எதார்த்ததில் ஊறி நிற்பவை. அந்நாள் வாழ்க்கையும் இன்று போல் சிக்கலான வாழ்க்கை அல்ல . இயற்கையோடு இயைந்த எளிய சிக்கல் குறைந்த வாழ்க்கை. “வள்ளுவனின் கருத்துப் புரட்சியை இன்றைய உலகத்தில் தலைசிறந்த தத்துவஞானிகளுள் பெருமதிப்புப் பெற்றுள்ள ஆல்பர்ட்டு என்ற சிந்தனையாளர் தமது “இந்தியச் சிந்தனையும், அதன் வளர்ச்சியும்”   ((Indian thought and its development) என்ற ஆராய்ச்சி வல்லநூலில் பிரமாதமாகப் பாராட்டுகின்றார். வேத கால இரிசிகளோடும், உபநிடத முனிவர்களோடும், கீதை ஆசிரியன் கண்ணனோடும் வள்ளுவனை ஒப்புநோக்கி…

கடல்வழி போக்குவரவினை முதலில் கண்டறிந்தவர் தமிழரே!

    தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…