திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…

வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்

   – –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013   இதழ்த் தொடர்ச்சி)  அ. செங்கோன்மை  நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு  இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   உ. பொருள் செயல்வகை  நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது.   1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.  (குறள் 751)      [பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்     பொருள்அல்லது இல்லை பொருள்.] பொருள் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   ஈ. படைச்செருக்கு   படைச்  செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி.   1. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (குறள் 771) [என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்.]   தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து,…

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இ. படைமாட்சி  படைமாட்சி – படையினது பெருமை. ஒரு நாட்டாட்சி நன்கு நடைபெறவும், நாட்டில் வாழ்வோர் அச்சமின்றித் தத்தம் கடனை ஆற்றவும் படை மிகமிக இன்றியமையாததாகும். அருள்நெறியில் ஆட்சி புரிவதாகக் கூறும் நாட்டுக்கும் படை இன்றியமையாதது. மக்களுக்குய தீக்குணங்களாம் பொறாமை, செருக்கு, பெருவிருப்பம், பிறரை ஆட்படுத்தும் எண்ணம் முதலியன ஒழியும்வரை படை வேண்டற்பாலதே. ஆதலினன்றோ இன்னா செய்தார்க்கும் இனியன செய்ய வேண்டும் என்று விதித்திடும் ‘குறள் நெறி’ அரசுக்கு வேண்டிய இன்றியமையாதனவற்றுள் படையை  முதற்கண் வைத்துள்ளது. “படை, குடி,…

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண்  சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம்.  நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 2. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (திருக்குறள் 731)   தள்ளா-குறையாத, விளையுளும்-விளைவிக்கப்படும் பொருள்களும், தக்காரும்-விளைவுக்குக் காரணமான அறிஞரும், தாழ்வுஇலா-குறைவுஇலாத, செல்வரும்-செல்வமுடையவரும், சேர்வது-சேர்ந்திருப்பது, நாடு-நாடு ஆகும். ‘விளையுள்’ என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள்கள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக்கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும். ‘தக்கார்’ என்பது நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்பதாகும். கற்றறிஞர், புதியன கண்டுபிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverers,…

இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை

இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.  திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.

திருக்குறள் வாழ்வியல் நூல்!

  – சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 1. நாட்டு இயல்  அ. நாடு*  நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து  ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது