பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் – அ.கி.பரந்தாமன்

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும்   தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது…

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள்  மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்   இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…

பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்

பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள்   என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை.   மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர்…

பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது! – இரா.நெடுஞ்செழியன்

பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது   பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை

திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்

  செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால்…

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்!   திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். –…

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது – தமிழ்த்தென்றல் திரு.வி.க.

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்;…

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! – மு.வை.அரவிந்தன்

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்; அகப்பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனை வளமும் இலக்கியச் சுவையும் சேர்த்து அமைக்கப்பட்ட கலைக்கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்ப நெறி.   வாத்சயாயம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்சயாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது. ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:…

திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!

திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!   திருக்குறள் ஏறக்குறைய இப்பொழுது எஞ்சி நிற்கும் இலக்கியங்கள் எல்லாவற்றினும் முற்பட்டதாகக் காண்கின்றது. எங்ஙனமாயினும், இதற்கு முன்னே இன்னோரன்ன நூல் தமிழில் இருந்ததாகக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. வடமொழியில் உள்ள மிருதிகளும் வருண சமயச் சார்புடனே நியாயப்பிரமாணங்களை அவ்வக்காலத்துக்கேற்றபடி கூறிய நூல்களாயின. நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும் இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம். ஆகவே, இஃது இணையில்லாத நூலாயிற்று. நூற்பாகுபாடுகளும் நூற்போக்கும் நுதலிய பொருளும் நமதாசிரியர் தமது கல்வி கேள்விகளினாற்றலால் தாமே…

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் – குன்றக்குடி அடிகளார்

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர்   திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை! தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 : தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66