கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் – குன்றக்குடி அடிகளார்

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர்   திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை! தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 : தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66

உலகநூல் திருக்குறள் ஒன்றே! – இரா.இளங்குமரன்

உலகநூல் திருக்குறள் ஒன்றே!  வள்ளுவர் பார்வை உலகப்பார்வை, ஒவ்வொருவரும் உலகவராம் பார்வை. அதனாலேயே தம்மையோ, தம் மண்ணையோ, தம் மண்ணின் மொழியையோ, தம் அரசையோ, தம் இறைமையையோ சுட்டினார் அல்லர். ஆதலால், உலகுக்கு ஒரு நூல் என உலகவரால் வள்ளுவம் கொள்ளப்படுகிறதாம். உலக மறைநூல் ஒன்று காண்டல் வேண்டும் என்னும் காலமொன்று நேரிடும்போது ஒரே ஒரு நூலாக நிற்க வல்லதும் வள்ளுவமேயாம். புலவர் மணி இரா.இளங்குமரனார் : உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! – ந.சேதுரகுநாதன்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே!   பகைவரால் எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு, உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர் பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’  என்று கூறப் பெறும். மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’…

திருக்குறளை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் உரை

. திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டி ஆளுநர் உரை   உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தமிழார்வலரான நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் முயற்சியின் பேரில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உரூ.200 ஆயிரம் (இரண்டு இலட்சம்) வழங்கி உள்ளார்.   சிலை அமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா தலைநகர் தேராதூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த…

திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி

சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி  – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து,  தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு  : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52  

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்

தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும். குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று…

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! – சி.இலக்குவனார்

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!   சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.   சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…

திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்

திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்   உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…

திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் – இரா.நெடுஞ்செழியன்

திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம்   உலக மக்கள் அனைவர்க்கும் பொதுப்படையாக அமைந்த ‘பொதுநூல்’ என்று பெயர் பெற்றது. உலகோர் போற்றிப் புகழுவதற்குரிய ‘பொதுமறைநூல்‘ என்னும் பெருமையுடையது. மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறவந்த ‘வாழ்வியல் நூல்‘ என்னும் சிறப்புடையது. எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகத் திகழக் கூடிய ‘வாழ்க்கை வழிகாட்டி நூல்’ என்னும் பெருமை பெற்றது. மக்கள் அனைவர்க்கும் அறநெறி கூறவந்த ‘அறநெறி நூல்’ என்னும் புகழ் பெற்றது. எல்லார்க்கும் அன்புநெறியை அறிவுறுத்த வந்த ‘அன்புநெறி நூல்’ என்னும் சிறப்பு பெற்றது. மக்கள்…

அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு

அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை….  தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம். -அறிஞர் சி.யூ.போப்பு

திருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்

திருக்குறளின் பொதுமையுணர்வு தமிழ்ச் செவ்வியல் நூலான திருக்குறள் வேறுபட்ட சமயத்தவராலும் பிரிவினராலும் உரிமை கொண்டாடப்படும் உண்மையே இதன் பொதுமையுணர்வைப் புலப்படுத்துகின்றது…… திருக்குறள் புத்தசமயத்தவர், சமணத்தவர், சைவர்கள், வைணவர் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. இது “பொதுமறை” என அழைக்கப்படுகிறது.   ஒழுக்கக் கேடரான ஆரிய இனத்தவர் எப்பொழுதும் குடிப்பதும் சூதாடுவதுமாக இருந்துள்ளனர். இவ்விரண்டிற்கும் இரிக்கு வேதத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. – மேதகு இராதாகிருட்டிணன்: சமயமும் பண்பாடும் (Religion and Culture)