வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

  (16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு?   நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன? என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு.   குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில்…

திருக்குறளில் உருவகம் 2 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி

   (16.03.14 இதழின் தொடர்ச்சி)     ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை – சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். அன்பு இல்லாதோர் பாலை நிலத்துப் பட்ட மரமாகின்றனர். இங்கு குளிர்ந்த நீரும் நிழலும் அன்பிற்கும், இவை இரண்டும் அறவே தோன்றாத பாலை நிலம்…

திருக்குறளில் உருவகம் – 1

 -ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி  தலைப்புக் குறிப்பு.   உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை   திருவள்ளுவர் இயற்றிய குறள்…

வாழ்வு நெறி – முனைவர் வ.சு.ப.மாணிக்கம்.

1. பலருக்குக் ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லாரும் வாழ வேண்டும்; எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானோர்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலுயுர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது.   தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டா எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டா எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது…

வள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்

  வாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன.   இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும்.   ஏனெனில் ஆட்சியே பொருளை…

வள்ளுவர் கூறும் வாய்மை-மு.ஏழுமலை கலை.மு.,

  பொதுவாக உலக வழக்கில் ‘உண்மை’ ‘வாய்மை’ என்னும் இரு சொற்களையும் ஒரு பொருள் குறிப்பனவாகவே மக்கள் வழங்கிவருகின்றனர். ஆனால், இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருளைச் சுட்டி நிற்பனவாகும்.   உண்மை என்னும் சொல், உள்ளதை அல்லது நிகழ்ந்த ஒன்றைக் குறிப்பது. மாங்காய் புளிக்கும்; கரும்பு இனிக்கும்; மரம் முறிந்தது; இவை அனைத்தும் உண்மைகள். முயல் கொம்பு; வாடாத நறுமலர்; தேயா நிலவு; இவை இல்லாத அல்லது நிகழாத இன்மைப் பொருள்களைச் சுட்டுவன. இதனின்று உண்மை என்னும் சொல் இன்மை என்பதன் எதிர்ச்சொல் என்று…

திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,

   வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை.    அவை; 1….

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்  புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி   மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியர் நமக்களித்த தொல்காப்பியம். இன்றைக்கு ஓரளவு தமிழ் படித்தவர்கள் தொல்காப்பியத்தைப்பற்றி அறிந்திருப்பினும் அறிந்திருக்க வேண்டிய அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய – இந்திய வரலாற்றாசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய – உலக மொழியறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய…

திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா,  அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1.   பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்.   இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…

திருவள்ளுவரும் கன்ஃபூசியசும் – விருதாளர் தைவான் யூசி உரை

ஒன்பான் விருதுகளை அறிவித்த தமிழக அரசு திருவள்ளுவர் நாளன்று விருதுகள் வழங்கப்பெறும் என்றும் அறிவித்தது. பின்னர் இவ்விருதுகள் குடியரசு நாளன்று வழங்கப்பெறும் என்று அறிவித்தது. எனினும் திருவள்ளுவர் விருது மட்டும் திருவள்ளுவர் நாளன்றே வழங்கப் பெறும் என அறிவித்தது. இதன்படி தை 2 ஆம் நாளான சனவரி 16 அன்று திருவள்ளுவர் விருது, திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்த தைவான் நாட்டுக் கவிஞர் யூசிக்கு வழங்கப்பெற்றது.  தமிழக நிதி-பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்று ஆகியவற்றை…