அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 1

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 1 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 2 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்

புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் :  ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]  

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் அ.இ.த.பே.செயற்குழுக்கூட்டமும் – ஒளிப்படங்கள்

கடந்த திங்கள் திருவனந்தபுரத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருமுத்துச்செல்வன் தலைமையில் புலவர் த.சுந்தரராசன், திரு முத்துராமன் முன்னிலையில் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் காப்பிக்காட்டு ஊரில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைப்பகுதியல் சிலையரங்கம் அல்லது கோபுரம் எழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அடுத்தது என்ன? – கலந்துரையாடல் நிகழ்வின் படங்கள்

மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி அளவில் சென்னையில், “ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” என்னும் தலைப்பிலான   34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல்  நிகழ்வின் ஒளிப்படங்கள் [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

சிலப்பதிகாரப் பெருவிழா 2017

(படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.)   “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017  சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா :  சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி  திரு.வி.க….

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்  தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார்.  உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  …

மாவீரர் நாள், வவுனியா : ஒளிப்படங்கள்

  தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ இல், விழி ஊறி நதியாகிய வவுனியா உறவுகள்!   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]  

செல்வி ப.இரா.நிகாரிகாவின் இசைப்பேழை வெளியீடு, சென்னை

   மரு.இராசுகுமார்-சுவர்ணசிரீயின் திருமகளும் முனைவர் வை.பழனிச்சாமி  இ.ஆ.ப.(நி) – மணிமேகலை, திரு பழனியப்பன்-முத்துராதா ஆகியோரின் அன்புப்பெயர்த்தியுமான 7-ஆம்வகுப்பு பயிலும் செல்வி ப.இரா.நிகாரிகாவின் ‘அழகு தமிழ் முருகா‘ என்னும் இறைப்பாடல்கள் ஒலிப்பேழை, சென்னை உருசியக் கலை-பண்பாட்டு மையத்தில் ஐப்பசி 20,2047 / நவம்பர் 05,2016  மாலை வெளியிடப்பட்டது. இசையறிஞர் பாலமுரளிகிருட்டிணா ஒலிப்பேழையை வெளியிடத் தமிழ்ப்புரவலர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். திரு வை. பழனிச்சாமி இ..ஆ.ப., வரவேற்புரை யாற்றினார். நல்லி குப்புசாமி, இந்தியப் பண்பாட்டு உறவுக்குழு (ICCR), மண்டல இயக்குநர் திரு ஐயனார், மரு.சீர்காழி சிவசிதம்பரம், ஒலிப்பேழையின்…