திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கப் படங்கள்

திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துத்தான் கல்லூரியில் புரட்டாசி 5, 2015 / 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. (பெரிய அளவில் காண ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காணவும்)

மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்

  அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி.   “சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு…

மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர். திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர். ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து…

மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…

. . . முகவரி அற்றவளா? – நூல் வெளியீட்டு விழா

தமிழீழப் பயணத்தின் நினைவுகளோடு மாளவி சிவகணேசன் எழுதிய என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா? நூல் வெளியீடு ஆடி 17, 2045 / ஆக.2, 2014 மாலை 6.00 சென்னை 600 004 வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெறுகிறார்.  

அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!

    அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்   இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு   புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…

அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்

‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம்.    இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி   தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00 உருவா   கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072   நெறிமுறைகள்:    1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது. 3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா 4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும். விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும் 5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது . 6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும் பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு  பரிசுகள்வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 இரண்டுமூன்றாம்பரிசுகள்…

பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்

  சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…