சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்!

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!     தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகசுடன், இலாங்லெட்டு, பிரசாந்து ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர்…

தேனிப்பகுதியில் கூடுதலான கம்பிவடக் கட்டணம்

தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலான கம்பிவடக் கட்டணம் தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் பெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் கம்பிவடக் கட்டணத்தைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரையறுத்து அடாவடியில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அதன் பின்னர் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர்களிடம் உரூ.70 மட்டுமே பெறவேண்டும் என வரையறுத்தது. அந்த அரசு அறிவிப்பு வந்தவுடன் அரசு வரையறுத்த கட்டணத்தைப் பெற்றனர். ஆனால், இப்பொழுது அரசு வரையறுத்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாகப் பெறுகின்றனர்….

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!   தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்?   கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…

‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்

  இராணிமைந்தன் நூல் வெளியீடு   சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி  இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய   வீதி இனி்யவனின்  அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும்  பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை

தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். மழை பொழியும் நேரத்தில் இடி இடித்தால் இயற்கையாகவே காளான்கள் வெளிவரத் தொடங்கும். இதில் பேய்க்காளான், வெண்மை நிறக்காளான் என இரண்டு வகைப்படும். வெண்மை நிறக்காளான்கள் மருத்துவகுணம் உடையது. மேலும் சைவப்பிரியர்கள் அசைவம் சாப்பிட்டதைப்போன்று உணரும் தன்மை உடையது, இக்காளான்கள் அரிதாகத்தான் கிடைக்கும். மேலும் இடிஇடிக்கும்போது பூமியிலிருந்து தானாகவே வளரும் தன்மை உடையது. தற்பொழுது இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவதால் தென்னந்தோப்புகள், வயல் வெளிகளில் காளான்கள் தன்னியல்பில் முளைத்து வருகின்றன. தோட்ட…

எழுத்தினூடே விரியும் தோழர் தியாகுவின் சித்திரம்

புரட்டாசி 26, 2045 / அக்.12, 2014 சென்னை   மார்க்சியம், சிறை இலக்கியம், கல்வி, தியாகுவின் உரைகள், மொழியாக்கம்  

அயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் கோயில் விழாக்களில் கொண்டாடப்படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டுக் கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், பச்சை குத்தும் கலை போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன….

சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்

 புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது. காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர்  பேராசிரியர் க.அன்பழகன்  தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன….

ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்

சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014  அன்று நடந்த   ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா  ஒளிப்படங்கள்   படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.    

புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து  புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன.  கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.