புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!

கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். –          குறள்நெறி: ஆனி 32, 1995  / 15.07.64

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

தமிழ் இலெமூரியா – இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக,  தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்று துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.   தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில்…

தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி

   நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16     “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:

அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு    பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள்,    ஆய்வாளர்களுக்கான  25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் தேர்வு பெறும் …

வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி

  அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…

“அகர முதல” கண்டு மலைத்தேன்.

“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு

விடுநர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.in பெறுநர் தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.in நாள் 21.04.2045 / 04.05.2014 மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும் வணக்கம்.    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்…

திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு

என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான்  தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…