தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 – ஒளிப்படங்கள்

  கணிணிப்  பயன்பாட்டிற்காகத் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு   தோற்றத்தில் உருவாக்கிவருவதை விரிவாக்கவும் அதற்கான தேவையை உணர்த்தவும்  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 நாள்களில் நடைபெற்ற தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வருமாறு. பட உதவி :  நூ த.உலோ. சு. & அகரம் படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க! [embpicasa id=”6208526006627876513″]

விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு

திருவாட்டி விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 காலை 10.00 பெரியார் நகர் 5 ஆவது தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091  பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்! [embpicasa id=”6201627847108567345″]

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு

புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு   உலகத்     திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா      வள்ளுவர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015   காலை 10.00மணிக்கு நடைபெற்றது.   இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி   எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’  என்ற இரு  நூல்கள்   மேனாள்   துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.   அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் முனைவர்…

தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! – பாவேந்தர் பாரதிதாசன்

இரகசியச்சொல் ஏடா தூதா இங்குவா தனியே என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர் இரகசி யச்சொல் இயம்பு கின்றேன் உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி இறந்தது வடமொழி என்று தமிழர் இயம்பி வந்த துண்டா இல்லையா? இறந்தது மெய்தான் என்னும் தமிழர் இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்! மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்? வடமொழி இறந்த தென்றதால் தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல் கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல் நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல் இன் தமிழ்ப் பயிற்சிக்…

துலுக்கப்பயலே! 7 -வைகை அனிசு

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி)  7    துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள்   தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்

  கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம் தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம்   சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது.   தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய…

திருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 073. அவை அஞ்சாமை              கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து               சற்றும்  அஞ்சாது பேசும்திறன் வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின்      தொகைஅறிந்த தூய்மை யவர்.            தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார்         கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார். கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன்      கற்ற செலச்சொல்லு வார்.                        கற்றார் மனம்பதியச் சொல்வாரே         கற்றாருள் கற்றார் எனப்படுவார்.        பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,…

திருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 072. அவை அறிதல் அறிஞர் கூட்டத்தின்  இயல்புகள்  ஆராய்ந்து ஒப்ப நடத்தல்.   அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின்      தொகைஅறிந்த தூய்மை யவர்.         சொல்வள நல்அறிஞர், அவையின்         இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர்.     இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின்      நடைதெரிந்த நன்மை யவர்.         தமக்கும், அவைக்கும், இடைநிற்கும்         இடைவெளியை நன்குணர்ந்து சொல்க.   அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின்    …

இலக்குவனார் கருத்தரங்க நூல் அறிமுகம் – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா   பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள்     அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது.   காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின்   உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார்…

பல்லாயிரம் அண்டமும் நின்படைப்பே! – பத்திரகிரியார்

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் இன்றுளோர்நாளை யிருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெல்லாம் (35) நீரிற்குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுன் பேரிற்கருணை வெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம் (63) அன்பையுருக்கி யறிவையதன் மேற்புகட்டித் துன்பவலைபாசத் தொடக்கறுப்ப தெக்காலம் (64) பல்லாயிரங் கோடிப் பகிரண்டமுன் படைப்பே அல்லாது வேறில்லையென் றறிவதுஇனி யெக்காலம் (154) சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம் (156) –  பத்திரகிரியார்

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? – இனப் படு​கொ​லைக்கு எதிரானவர்கள் ​கேள்வி!

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? இனப் படு​கொ​லைக்கு எதிரான ​ செய்தியாளர்கள், க​லைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு ​கேள்வி!   “தமிழ​ரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்​கை​யைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? ​என்ற த​லைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 2046​13-09-2015 அன்று சென்​னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்​கோ மன்றத்தில்       ந​டை​பெற்றது.   தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம்     அமையவும், இலங்கையின் மீது     இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…