பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு

பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்;  வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி  நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில்  கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…

நாய்க்கும் கிளிக்கும் தோழமை

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஒலிமடா பகுதியில் கணபதி என்பவர் வசிக்கிறார். இவர் பப்பி  என்னும் நாயையும் ரோசி என்னும் கிளியையும் வளர்த்து வருகிறார்.  நாய் கம்பித்தடுப்பு உடைய  கூண்டுபோன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் பப்பி/நாய் இருந்த  கூண்டிற்கு ரோசி/கிளி சென்றுள்ளது. உடனே பப்பி/நாய் வெறியுடன் ந்த பப்பி, ரோசி/கிளியைக் கடிக்க முயன்றது.  விர்ரென்று பறந்து ரோசி உயிர் தப்பியது. மீண்டும் ஒரு முறை பப்பி கூண்டிற்கு ரோசி சென்றது.  ஆனால்,  இந்தமுறை  அமைதியாக இருந்தது. இதையடுத்து, நாட்கள் செல்ல..செல்ல….

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.    இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன…

மலேசிய முத்து நெடுமாறனுடன் ‌செவ்வி – இரா.தமிழ்க்கனல்

  மலைக்கவைக்கும் செல்லினம் செயலி!       ’செல்பேசி இல்லாதவர்கள், செல்லாதவர்கள்’ என்று ஆகிவிடும் போல உலகம் முழுவதும் நிலைமை மாறிவருகிறது. அலைபேசியின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காகத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் இடைவிடாது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகிறார், மலேசியாவைச் சேர்ந்த கணினிக் கணிய(மென்பொருள்) வல்லுநர், முத்து நெடுமாறன். தமிழில் இணையம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கணினித் தமிழ்த் துறையில் களம் இறங்கி, இன்று உலக அளவில் முன்னணி எழுத்துரு வல்லுநர்களில் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். அலைபேசிகளில்  தமிழைப் பயன்படுத்துவதற்கான…

எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன

பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…

செந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி. தந்தை: ஆறுமுக(முதலியார்). தாய் : தங்காள். ஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம். படிப்பு : ஐந்தாம் வகுப்பு. திருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார். மணமகளின் தந்தை : வையாபுரி தாய் : விருத்தம்பாள். ஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம்…

மொழிப்போர் ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

1938, 1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகியர் : 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார். 4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார். 5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டித் திடலில்…

“துறைதோறும் கம்பன்” பன்னாட்டுக் கருத்தரங்கம்: மார்ச்சு15-இல் காரைக்குடியில் தொடக்கம்

   கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்” என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம்  நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.   கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.   “கம்பன் துறைகள்” என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச்சு 15,   16 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி…

தொண்டிக் கடற்கரையில் தோண்டத் தோண்ட .. 500க்கும் மேற்பட்ட தெய்வப் படிமங்கள்

திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய  கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர்.  அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா  முதலான காவலர்களும்  மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி…

பின்பக்கத்தில் ஆண்டு குறிப்பிடாத பணத்தாள்களை மாற்றிக்கொள்க!

  பின்பக்கத்தில் ஆண்டு இல்லாத உரூபாய்தாள்களை மாற்றிக்கொள்ள  சேம(ரிசர்வு) வங்கி அறிவுறுத்தல்   இது குறித்து,  இந்தியச்  சேம வங்கி, அதன் வலைதளத்தில், “கடந்த, 2005 ஆம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்துப் பணத்தாள்களும் திரும்பப் பெறப்படும்,”  என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   2005  ஆம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட  பணத்தாள்களில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது எனவும் இவற்றை அனைத்து வங்கிகளும், வரும் ஏப்பிரல் முதல்நாள் முதல் திரும்பப் பெறும் எனவும் வரும் சூலை முதல்நாள் முதல், வங்கிக் கணக்கு இல்லாதோர், 10க்கு மேற்பட்ட…

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி

 சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18  மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.  இதில்  குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.  வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல்…