புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா : படங்கள்
ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன் பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!
வைணவரின் சமக்கிருத மோகம் – மு.அருணாச்சலம்
வைணவரின் சமக்கிருத மோகம் வைணவர்கள் இக்காலத்தில் செய்த நூல்கள் எல்லாம் வடமொழியில் இருந்தனவேயன்றித் தமிழில் எதுவுமில்லை. இதற்கு ஒரு காரணம், வடமொழி ஒன்றுதான் தங்களுக்கு உய்வு தந்து பரமபதத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று அக்காலத்துப் பிராமண சமயத் தலைவர்கள் கொண்டிருந்த எண்ணம். வைணவர்கள், அடியாருக்குள் சாதி வேற்றுமையை இல்லை என்று சொல்லிய போதிலுங்கூட, தங்கள் ஆசாரிய பரம்பரையில் சாதி வேற்றுமையையே கடைப்பிடித்து வந்தார்கள். அவர்கள் திருக்கச்சி நம்பி, பிள்ளை உறங்கா வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலிய வைணவப் பெரியார்கள் பிராமணர் அல்லாதவர், பிந்திய…
இனமான இராவண காவியம் – கா.வேழவேந்தன் – நிகழ்வுப் படங்கள்
பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!
பாலமுரளி பிறந்தநாள் விழா – செல்வி அமிர்தாவின் நாட்டிய அரங்கேற்றம்
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 110 ஆம் ஆண்டுவிழா ஒளிப்படங்கள்
ஆனி 22, 2046 / சூலை 07, 2015 பெரிதாய்க் காணப் படத்தின்மேல் சொடுக்குக!
வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…
மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2880 தி.ஆ. 2046 ஆடவை ( ஆனி ) 13 28–06–2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே. கடந்த 22ஆம் நாள் உங்கள் புகழுரையை மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது ” உன்னை அறிவாளி யாரேனும் பாராட்டும்போது உடனே ” ஆம் நான் அறிவாளிதான் ” என்று ஒப்புக் கொள். காரணம் அந்தப்…
பேரா.வெ.அரங்கராசனின் திருக்குறள் அறுசொல் உரை – கு.மோகன்ராசு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் 2—ஆம் நாள் [16 –- 01 – 2015] அன்று நடத்திய திருக்குறள் எழுச்சி மாநாட்டில், திருக்குறள் தூயர் பேராசியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள முன்னிலையில், திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி கோ. பார்த்தசாரதி அவர்கள் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள் எழுதிய திருக்குறள் அறுசொல் உரை என்னும் நூலை வெளியிட்டார்கள். முதல் படியைக் கவிமாமணி க. குணசேகரன் அவர்கள். பெற்றார்கள். அந்நூலில் இடம் பெற்ற மதிப்புரை வருமாறு:…
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் 70ஆம் ஆண்டு விழா – ஒளிப்படங்கள்
சென்னை ஆனி 08, 2046 / சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 (பெரிதாகக்காணப் படத்தின்மேல் சொடுக்கவும்)
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா – நிகழ்ச்சிப்படங்கள்
ஆனி 02, 2046 /21.06.201 ஞாயிறன்று சென்னை உமாபதி அரங்கத்தில் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. (பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்) நிகழ்ச்சி விவரம்
கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா
கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) – 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் – வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன. திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். விழா ஏற்பாடு – எம்.கே.மணி, காவிரிமைந்தன், அ.நாகப்பன், ஏ கே.நாகராசன், மன்னார்குடி மலர்வேந்தன் மற்றும் பலர். (படங்களைப் பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல்…
இந்திய நாகரிகம் என மொழிவன எல்லாம் தமிழர் நாகரிகங்களையே! – தனிநாயக அடிகள்
இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்கினால் மாக்சுமுல்லர், வின்றர்னிட்சு போன்றவர்கள் வட மொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். தமிழ் இலக்கியத்தைப் பற்றி, ஒரு சொல்லேனும் ஒரு குறிப்பேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம் என அவர்கள் மொழிவன எல்லாம் திராவிட நாகரிகம், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாக் கொண்டவையாயினும், பல்லாண்டுகளாக நடுவு நிலைமை கடந்தோர் பலர் இவ்வுண்மையை மறைத்தும் திரித்தும் ஒளித்தும் நூல்கள் யாத்துள்ளனர். இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதற்குப் பெரிதும் மனத் துணிவு வேண்டியுள்ளது. ஆதலால் உலகம்…
