தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து 10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….
100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன்
‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100 புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார். அவர் ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை…
பிரணாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீதான கொடுந்தாக்குதலை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!
2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு. இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….
திருக்குறளும் புதிய பார்வைகளும் – பேரா.மறைமலை பொழிவு
7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும் புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது. துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர் புலவர் வீரமணி தலைமை தாங்கினார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு விருந்தினராகப் பாராட்டப்பட்டார். வரவேற்புரை பட்டிமன்றச் செயலர் பொறி. பக்தவத்சலம் தலைமையுரை புலவர் வீரமணி
டி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார்
குரு அழைத்ததால் இணைந்தேன் என்று அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர் விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம் உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது விசய டி.இராசேந்தர் கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம், ஆர்க்காடு விராசாமி தலைவர் பார்க்கவேண்டுமென்று கூறி இங்கு அழைத்து…
தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்
அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும், மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று…
தமிழ் பிரபாகரன் விடுதலை! நேற்றிரவு சென்னை வந்தார்.
இலங்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன் உடன் பயணம் மேற்கொண்ட பொழுது தளையிடப்பட்ட மகா.தமிழ் பிரபாகரன் நேற்று 28.12.12 சனி யன்று விடுதலை செய்யப் பெற்றார். இரவே சென்னை வந்துசேர்ந்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்த அவர், எங்ஙனம் யாழ்ப்பானம் பகுதியில் ஒளிப்படம் எடுத்திருக்க முடியும் என்ற உண்மையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். வரும் 30.12.13 திங்கள் மாலை செய்தியாளர் கூட்டத்தில் முழு விவரம் குறித்துத் தெரிவிப்பதாக தமிழ்ப்பிரபாகரன் அகரமுதல்…
இராணிமேரி கல்லூரி- தமிழாய்வு நெறி – கருத்தரங்கம் 06.01.14
பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது – தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தில்லி சவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.அறவேந்தன் நூல்களைப் பெற்றுக்கொண்டு முதன்மையுரையாற்றினார். விழாவில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை …
ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணாக்கியர் சௌசன்யா
ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில் சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார். நிசாமாபாத்து நகரில், சூரியநகர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார். திசம்பர் 25 அன்று, தீட்சப்பள்ளியில்(Dichpally) அலுவலர்கள் முன்னிலையில் இவர், தன் அருவினையை நிகழ்த்திக்காட்டினார். அப்பொழுது 4 நிமையம் 56 நொடிகளில் 1,150 தடவைகள் ஒற்றைக்கையால் தட்டி…
தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி
பரிசு உருவா 1000.00 பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28 சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள் 5 பாடல்கள் எழுத வேண்டும். முதற்பரிசு 500.00 உருவா இரண்டாம் பரிசு 300.00 உருவா மூன்றாம் பரிசு 200.00 உருவா நெறிமுறைகள் 1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும். 3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். 4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும். 5.பாடல்கள் தாளின் ஒருபக்கம்மட்டும் இருத்தல் வேண்டும். தாளின்…
தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை
தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான் அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர் வேறு எங்கும் சொந்த வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…
