‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா
சார்சாவில் மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா தலைமை: முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை: முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக்…
இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல், 30.06.2022
இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல் 59 ஆனி 16, 2053 / 30.06.2022 இரவு 7.00 இருட்டில் இலங்கை அடையாள எண் 864 136 8094 புகு எண் 12345 பேசுநர் தோழர் தியாகு தோழர் செந்தில்
நம்பிக்கையுடன் எழு! : கி.பி. அரவிந்தன்
நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்
11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023
உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR) இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சார்சா, ஐக்கிய அரபு அமீரகம் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்: புரட்டாசி 13, 2053 / 30.09.2022 ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்: பங்குனி 17, 2054 / 31.03.2023 மின்வரி: abstract2023@gmail.com தொடர்பு முகவரி : 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819 www.iatrinternational.org / 11worldtamilconf@gmail.com ஆன்றோர்(தான்சிரீ)…
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 தமிழ்நாட்டில் தமிழே எங்கும் திகழ அனைவரும் கருத்தூன்றிப் பணியாற்ற வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் தமிழ்த்துறையினர் பொறுப்பு இது என்று வாளா இருக்கின்றனர். மறு பகுதியினர், அரசின் வேலை இது என்று ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், அனைவருக்குமான கடமை இது என யாரும் உணரவில்லை. அதனால்தான் தமிழ் ஒருபுறம் தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டு உள்ளது; மறுபுறம் சிதைந்து தேய்ந்து கொண்டுள்ளது. தமிழே நம் தேசிய…
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் நிறைவு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 – நிறைவு திறனாய்வு (தொடர்ச்சி) இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின்…
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22 திறனாய்வு 4 தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம். நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர்…
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 21 திறனாய்வு (தொடர்ச்சி) 3 இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின்…
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 20 திறனாய்வு (தொடர்ச்சி) 2 உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்காலக் கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம்…
தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022 முதல் பரிசு: அமெரிக்கப்பணம் $ 1000.00 இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00 மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00 கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும். கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கட்டுரை குறித்த 5 நிமைய…
தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா
தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org
குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்
பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com
