திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது. இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான். முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…
பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு
தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்! பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது. பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்மக்களுடைய இனச்சிக்கல் தொடர்பில் நீண்ட காலமாகத், தான் கொண்டுள்ள…
தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல், சென்னை
கார்த்திகை 12, 2047 / திசம்பர் 07, 2016 மாலை 6.00 பெரியார் மணியம்மை மன்றம்,சென்னை 600 007 தமிழ்ப்போராளி வின்செண்டு பஞ்சாட்சரம் நினைவேந்தல் கலிபூங்குன்றன் சந்திரகாசன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் சா.கணேசன் மணிமேகலை கண்ணன் இதயதுல்லா உலகநாயகி பழனியப்பன் வா.மு.சே.திருவள்ளுவர் கண்மதியன் செந்தமிழ்ச்செழியன் வா.மு.சே.ஆண்டவர் திவாகரன் திராவிடர் கழகம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் பன்னாட்டுத் தமிழ் நடுவம்
மாவீரர் நாள், வவுனியா : ஒளிப்படங்கள்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ இல், விழி ஊறி நதியாகிய வவுனியா உறவுகள்! [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
ஈழ இளையோரே நெறி தவறாதீர்!
ஈழ இளையோரே நெறி தவறாதீர்! 2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் – தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…
தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்
துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான + அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016 தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது. மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள் உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன. எதிர்வரும் கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில் சே.எசு.எசு. (JSS Private…
துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி
துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா சிரீராம(ஐய)ரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தன. மலர் வணக்கம், அலாரிப்பில் தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன் தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…
அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை
அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…
ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்
ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே!…
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு, தி.பி.2047 / கி.பி.2046
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL) புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர். இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில்…
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
