பொங்கல் விழா 2047 / 2016, கனடா
தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல் பிற்பகல் 02.00 வரை கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…
சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்
ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016 முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய
ஈப்போ : பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு விழா
மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016
திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி
மார்கழி 22 – 24, 2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்
தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்
தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில் தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் [ Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில்] நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய…
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29 ஆம் நாள் தொடங்கி பிப்பிரவாி 7 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…
சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்
சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவம் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – முதுவை இதாயத்து
இலாத்துவிய மொழியில் திருக்குறள்!
இலாத்துவிய மொழியில் திருக்குறள் காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram). இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை! ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…
ஓம்தமிழ் கலைச்சொல் செயலி
புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு: முகிலன் முருகன்
பிரான்சு கலைஞர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும்
மார்கழி 18, 2047 / சனவரி 03, 2016
வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்
தை 02, 2047 / சனவரி 16, 2016 உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி…
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது. அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த…
