அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?
அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா? தன்நாட்டுக்குடிமகள் ஒருத்தியின் கற்பிற்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அனைவர் வீட்டுக் கதவுகளையும் தட்டியதாக விளக்கம் அளிக்காமல் மன்னனாயிருந்தும் தன் கையை வெட்டிக் கொண்ட பொற்கைப்பாண்டியன் என்னும் மன்னன்ஆட்சி செய்த தமிழ்நாடு இது. ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன் எனக் ‘குணநாற்பது’ என்னும் இலக்கியத்தில் நமக்குக் கிடைத்த ஒரே பாடலில் இடம்பெற்ற இவ்வடிகள் இவ்வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. வச்சிரத் தடக் கை அமரர் கோமான் உச்சிப் பொன் முடி ஒளி…
பண்பாளருக்குப் பரிசு -செல்வி
பல்கேரிய நாட்டுச் சிறுகதை பண்பாளருக்குப் பரிசு கதிரவன் மறைந்து நிலவு வந்தது. தன் வருகையை மகிழ்வுடன் வரவேற்காமல் கதிரவன் மறைவிற்குப் பூமி வருத்தமாக கருப்பு ஆடையை அணிந்து கொண்டு இருக்கிறதே என நிலா சினங்கொண்டு முகில் கூட்டத்தில் மறைந்தது. இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் ஏழ்மைத் தோற்றத்தில் இருந்த முதியவர் ஒருவர் அந்த ஊருக்குள் நுழைந்தார். ஊரின் தொடக்கத்தில் தெரிந்த பெரிய மாளிகை ஒன்றினுள் நுழைந்தார். அவ் வீட்டில் இருந்த பெண்மணியிடம் ”அம்மா இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கின்றேன்” என்று…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 ஈந்து மகிழ்க! இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார். ‘ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’…
தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான் அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்! அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர் விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும்…
வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் – இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க. துடிக்கிறது! மத்திய அரசின் விளம்பரம், பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம்…
உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) – இலக்குவனார் திருவள்ளுவன்
உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள் 644) நாம் உணவுதரும் நிலையத்தை உணவகம் என்கிறோம். தங்குமிடத்தை விடுதி என்கிறோம். உணவுவசதியுடன் தங்குமிடத்தை உண்டிஉறையுளகம் (Boarding and Lodging) என்று முன்பு குறித்தாலும் இப்பொழுது உணவு விடுதி என்கிறோம். என்றாலும் விடுதி (Lodge) என்ற சொல்லை மாணவர்கள் அல்லது பணியாற்றுநர் தங்குமிடமாக(Hostel) நாம் கையாள்கிறோம். தங்குமிடம் என்ற சொல்லில் கையாண்டால், வேறுவகை தொழில் நடக்குமிடமாகக் கருதிப் புறக்கணிக்கி்றோம்….
உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (2) – இலக்குவனார் திருவள்ளுவன்
உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) (தொடர்ச்சி) உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (2) உணவகங்கள், உறைவகங்களில் உள்ள தகவல் விவரங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. முன்பு ஒரு முறை உறைவகம் ஒன்றில் நடைபெற்ற தமிழறிஞர் ஒருவர் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே முகப்பில் ஆங்கிலத்தில் விவரங்கள் குறிக்கப்பெற்ற தட்டி இருந்தது. அவர் மகனிடம் தமிழில் எழுதுவோர் கிடைக்கவில்லையா எனக் கேட்டேன். “வரவேற்புத்தட்டி உறைவகத்தினர் அன்பளிப்பாம். ஆங்கிலத்தில்தான் வைப்பார்களாம். மேடையில் வேண்டுமென்றால் தமிழில் வைத்துக்கொள்ளலாமாம். நான் எவ்வளவு கேட்டும் வரவேற்புத்தட்டியைத் தமிழில் வைக்க இடந்தரவில்லை” என்றார்….
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க! பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…
வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! அரசியலாளர்களுக்கும் பிறருக்கும் உள்ள இலக்கணமே வாக்கு மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான் ஆக வேண்டியுள்ளது. தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே! பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்! யாரும் வாக்கு…
தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! பெயர்களை இரு மொழிகளில் ஒரே நேரம் குறிப்பிடுவோர் உலகில் நாம் மட்டுமாகத்தான் இருக்கிறோம். பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அதை அப்படியே தமிழில் குறிப்பிடும்பொழுது நமக்கு இழுக்கைத் தருகிறது என்பதை உணரத் தவறுகிறோம். பொதுவாக, தந்தை பெயர் அல்லது தாய்பெயர் அல்லது பெற்றோர் பெயர் அல்லது ஊர்ப்பெயர் முதலானவற்றின் முதல் எழுத்தையே நம் தலைப்பெழுத்தாக இடுகின்றோம். கதிரவன் மகன் நிலவன் என்னும் ஒருவர் தன் தந்தையின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுத் தன் பெயரைக் கே.நிலவன்…
தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள், தமிழைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை. தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா? பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத் தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர், பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09. பணத்தினைப் பெருக்கு! தொழில் நோக்கமும், தொழிலுக்கு அடிப்படைத் தேவையும் என்ன? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அன்றோ? “பொருளில்லார்க்கிலை யிவ்வுலகு என்றநம் புலவர்தம்மொழி, பொய்ம்மொழி யன்றுகாண் பொருளி லார்க்கின மில்லை, துணையில்லை பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால் பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்” (பக்கம் 255 / சுயசரிதை) எனும் பொய்யாமொழிப் புலவரைப் போன்று ‘செய்க பொருள்’ என்கிறார். பொருள் எதற்கு? “இல்லாமையை இல்லாமல் ஆக்குக இல்லை என்ற கொடுமை…
