தேர்தல் முடிவுகளின் தாக்கம்! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் தாக்கம் இலக்குவனார் திருவள்ளுவன் உடன் விசவனூர் வே. தளபதி உரையாடல்
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 1/2 முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார். தமிழ்-கொரிய, தமிழ்-சுமேரிய, தமிழ்-சீன பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள் பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ் ஆசிரியர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…
ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம்-09.06.2024 காலை 10.00 – தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.( திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : வைகாசி 27, 2055 **** 09.06.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் முனைவர் வேணு புருசோத்தமன் திருக்குறள் நம்பி ச.சிரீதர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 311. Acceptable ஏற்கத்தக்கது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது. ஏற்கத்தக்க ஒலி அளவு. மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை. இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு. நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல். 312. Acceptable reliability level ஏற்பு நம்பக அளவு ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு. 313. Acceptability ஏற்புத்திறன் …
சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 301-305: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 306. Accelerator முடுக்கி முடுக்குப் பொறி விசை முடுக்கி முடுக்குநர் ஊர்தியில் காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி. ஒரு செயலை அல்லது குற்றச் செயலை விரைவாகச் செய்வதற்கு முடுக்கி விடுபவர். 307. Accent அசை அழுத்தம், ஒலி எடுப்பு ஒருவருடைய நாடு, நாட்டின் பகுதி, குமுகாயப் பிரிவு, இனவழிக்குழு, இயற்கைச் சூழல் முதலியவை சார்ந்து அமையும்…
ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஐந்திரம் தமிழ் நூலே! தொல்காப்பியப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்னும் அடியில் குறிப்பிட்டுள்ள ‘ஐந்திரம்’ என்பது தமிழ் நூலே. இது குறித்த கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரையைக் காண்போம். இலக்கணம் அறியார் இலக்கண நூலை எங்ஙனம் எழுதியிருப்பர்? ஐந்திரம் என்பதைச் சமற்கிருத நூலாகச் சிலர் திரித்துக் கூறுகின்றனர். அதை நம்பும் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால்…
சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 301. accelerated soil erosion விரைவான மண்ணரிப்பு விரைந்த மண் அரிமானம் மாந்தவியல் செய்முறைகள், மண், தாவரங்கள் அல்லது தட்ப வெப்ப நிலைகளை மாற்றியமைக்கும்போது இயல்புத் தன்மைக்கு மீறிய அரிமானம் நிகழ்கிறது. 302. Acceleration முடுக்கம் நடைபெற உள்ளதன் காலத்தைச் சுருக்குவதைச் சட்டம் முடுக்கம் எனக் குறிக்கிறது. முன்னுறல் உரிமை முன்னுறல். எதிர்நோக்கும் உரிமை அதற்கு முன்னவர் செயற்பாடின்றிப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 296-300 296. accede இணங்கு பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள். கூட்டுச் சேரு ஒப்புதல் தெரிவிக்க அல்லது இசைவளிக்க அரசு வேண்டுகை அலலது கோfரி்கையை ஏற்றுக் கொள்ளல் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையில் ஒரு தரப்பாகச் சேருதல் பதவியில் சேருதல் accēdō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அணுகுதல் இதிலிருந்து உருவான சொல் accede. 297. acceded ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒப்புக் கொள்ளப்…
தமிழ்க்காப்புக்கழகம் : 26.05.2024 காலை 10.00 : ஆளுமையர் உரை 95 & 96 ; என்னூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் வைகாசி 13, 2055 **** 26.05.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 95 & 96 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கவிஞர் தஞ்சை ம.பீட்டர் முனைவர் பா.இளமாறன்(எ) செய்கணேசு என்னூலரங்கம் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி. இலக்குவனார்’ நூல் குறித்து முனைவர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 291-295: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 286-290 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 291-295 291. Academic year கல்வி ஆண்டு கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள காலத்தைக் குறிப்பதாகும். பள்ளிகளில் கல்வி ஆண்டை முதல் பருவம்(காலாண்டுப் பருவம்), இரண்டாம் பருவம்(அரையாண்டுப் பருவம்), மூன்றாம் பருவம்(முழு ஆண்டுப்பருவம்) என மூன்று பருவங்களாகப் பிரித்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார்கள். கல்லூரிகளில் இரு பகுப்புகளாக முதல் பருவ முறை…
