முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல் இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார். பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…
ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று
தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017 மாலை முதல் தை 17, 2048 திங்கள் , சனவரி 30, 2017 மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று. இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048 ஞாயிறு சனவரி 29,…
வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.
வவுனியாவில் தை 10, 2048 திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் …
தமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கருத்தரங்கம், சென்னை
தை 09, 2048 ஞாயிறு சனவரி 22, 2017 மாலை 3.00
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா? ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்! தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே முதன்மையையும் மக்கள் ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது. தமிழர்களுடைய சிக்கல்களை நாம் அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி சொல்லும் உண்மை ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் ஐந்தாம் பகுதி இது. இதில் சிவராசன் பற்றிய பகுதிகள் இடம்பெறுகின்றன: இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சிவராசன் உண்மையில் பிடிக்க முடியாத ஆளா அல்லது பிடிபடாத ஆளா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எங்களைக் கேட்டால், மிக எளிதாகவே சிவராசனைப் பிடித்திருக்கலாம். வேண்டுமென்றே அவரைப் ‘பிடிக்க முடியாத’…
நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்!
4 நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என்…
பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவல் – ஈழத்து நிலவன்
பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு. பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு. சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை…
இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி
3 இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ என்கிற தலைப்பில் நளினி எழுதியிருக்கும் நூலின் மூன்றாம் பகுதி இது! 19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர் யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன. “நான் பிரியங்கா…
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை! உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள் சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது. இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…
காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்
காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை. மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை. இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன.. மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது. ‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி…
ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர் அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார். சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…
