உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்! விடுதலைப் போராளி, உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன், பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz : ஆடி 28, தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை…
போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்
https://youtu.be/X7NNCsIUu2E விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்!…
கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…
தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!
ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்! அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்! அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்! அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…
தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!
கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க! மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…
கனவல்ல தமிழீழம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கனவல்ல தமிழீழம்! மெய்யாகும் நம்பிக்கை! தமிழீழம் என்பது கனவல்ல! நேற்றைய வரலாற்று உண்மை. நாளை நிகழப்போகும் உண்மை வரலாறு! போராளிகளாக, விடுதலைப்புலிகளாக, வான்புலிகளாக, கடற்புலிகளாக, உயிர்க்கொடைஞர்களாக, எனப் பல்வகை ஈகையர் தங்கள் மனக்கண்ணில் கண்ட உண்மையே தமிழ் ஈழம்! அது வெறும் கனவல்ல! அருந்தமிழ் உணர்வும் அறிவுச் செம்மையும் அறிவியல் புலமையும் போர்வினைத்திறமும் மாந்த நேயமும் பண்பு நலனும் கடமை உணர்வும் கொண்ட ஈழத்தமிழர்கள் போர்க்களங்களிலும் பிற வகைகளிலும் தம் உயிரைக் கொடுத்ததன் காரணம் வெறும் கனவல்ல! பழந்தமிழர்கள் தனியரசாய் ஆட்சி …
தேசிய நினைவெழுச்சி நாள் 2016, அமெரிக்கா
கார்த்திகை 12, 2047 / நவம்பர் 27, 2016
மாவீரர் நாள், கருத்தரங்கம், வடபழனி, சென்னை
கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016
மாவீரர்களைச்சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு
மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்! கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!! ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)
மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video) மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த…
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும் திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே இன்றும் வாழ்வினைப் பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…
