உ.வே.சா.வின் என் சரித்திரம் 35: விவாகமுயற்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 34 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 20 விவாகமுயற்சி வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம் பிள்ளையும் அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள் ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர். சிதம்பரம் பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத் தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற்…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 4/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5 நடை நலம்1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது. 2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார். 3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம். 4. இரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 34

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 33 தொடர்ச்சி) அத்தியாயம் 19: தருமவானும் உலோபியும்: தொடர்ச்சி அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும் நான் இளங்குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 ஆய்வு நூல்கள்நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள், “உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 33

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 32 தொடர்ச்சி) அத்தியாயம் 19தருமவானும் உலோபியும் கார்குடி சென்றது கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கத்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் சிரீவைணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். அங்கே சிரீநிவாசையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் சாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த சிரீ…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 2/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5 மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர் தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் இரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன.முனைவர்மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் இரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 32

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 31 தொடர்ச்சி) கத்தூரி ஐயங்கார் வருகை நான் இவ்வாறு குன்னத்தில் இருக்கும்போது சிரீ வைணவர் ஒருவரது வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அதற்காக அவ்வூரின் வடக்கேயுள்ள கார்குடி என்னும் சிற்றூரிலிருந்து அந்த வீட்டினருக்குப் பந்துக்களாகிய சிலர் வந்தனர். அவர்களில் கத்தூரி ஐயங்காரென்பவர் ஒருவர். அவர் சிதம்பரம் பிள்ளைக்குப் பழக்கமானவர். சிதம்பரம் பிள்ளை என்னிடம் கத்தூரி ஐயங்காரைப் பற்றி “அவர் சிறந்த தமிழ் வித்துவான். இந்தப்  பக்கங்களில் அவரைப் போன்றவர் ஒருவரும் இல்லை.  கம்பராமாயணத்திலும் மற்ற நூல்களிலும் நல்ல பழக்கமுடையவர். நன்றாகப்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 31

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 30 தொடர்ச்சி) சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று உரூபாய் கொடுத்தார். அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர். “நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? இராசாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம்: 09.04.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                                தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 26, 2054 ஞாயிறு 09.04.2023 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 தோற்றுவாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்;…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 30

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 29 தொடர்ச்சி) என் சரித்திரம் தொடர்ச்சி அத்தியாயம் 17 தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள். புலவர் வருகை திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள் வருவார்கள். எல்லாரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல…

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3  – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3  தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 ‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோபாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி, என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம்…