சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 571-580
Acrobatic | வான் சூழ்ச்சிச் செலவு கழைக்கூத்தாடி செப்பிடு வித்தைக்காரன் கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற வான்வழிப்பயணத்திற்குத் தேவையில்லாத பொழுது மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியான வான்வழிச் செல்லுதலைக் குறிக்கிறது. |
Across | குறுக்காக, கடந்து ஒரு பரப்பின் ஊடாகச் செல்லுதல் |
Across a customs frontier, taking it | சுங்க எல்லை முழுவதும் ஒரு சுங்க எல்லையைக் கடந்து, எடுத்துச் செல்லுவதைக் குறிக்கிறது. |
Act | சட்டம் சட்டகை, செய்சட்டம், செயல்/செய்கை நடி, நடிப்புக் களம், தொழில், நாடகம், வினை, மத்திய மாநிலச் சட்ட அவைகளால் – நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளால் – நிறைவேற்றப்படும் விதி, சட்டம் எனப்பெறுகிறது. சட்டவிதி என்றும் கூறப்படும். இந்தியத்தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 33, செயல்களின்/ செய்கைகளின் வரிசையையும் – அஃதாவது – தொடர் செயல்களையும் – ஒரே செயலாகக் குறிக்கிறது. குற்றம் அல்லது தீங்கு இவற்றைக் குறிக்கும் பொழுது செயல் என்ற சொல் செயல் வரிசைகளையும் செய்தக்க செய்யாமைகளையும் உட்படுத்தும்(பொதுவிளக்கச்சட்டம்). |
Act abetted different from that intended by the abettor | குற்றச் செயல் விளைவிற்குப் பொறுப்பாகும் குற்ற உடந்தையர் செயல் குற்ற உடந்தையர் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. |
Act and law | சட்டமும் விதியமும் Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – இயற்றப்படும் சட்டம். Law என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம். |
Act bonafide | நம்பிக்கைச் செயல் நல்லெண்ணச் செயல் நன்னம்பிக்கையுடன் அல்லது நல்லெண்ணத்துடன் கபடமோ வஞ்சகமோ இன்றிச் செய்யப்படுவது. நன்னம்பிக்கை அல்லது நல்லெண்ணச் செயலால் தவறு விளைந்தாலும் அறிந்தே செய்த குற்றமாகக் கருதப்படாது. காண்க: act done in good faith |
Act constituting an offence | குற்ற உருவாக்கச் செயல் ஒருவரின் அல்லது ஒரு கூட்டத்தாரின் செயலால் குற்றம் நேரும் பொழுது அச்செயல் குற்ற உருவாக்கச் செயல் எனப்படுகிறது. |
Act,central | மத்தியச் சட்டம் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்படும் மாநிலங்களுக்குப் பொதுவான சட்டம். மத்தியச்சட்டம் என்பது நாடாளுமன்றச் சட்டம். இந்திய அரசியல் யாப்பு நடைபெறுவதற்கு முன்பு தன்னாட்சி அரசால் இயற்றப்பட்ட சட்டம் அல்லது தலைமை ஆளுநரால் இயற்றப்பட்ட சட்டம். |
Act Done At Request | வேண்டியதால் மேற்கொள்ளப்பட்ட செயல் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன்படி உறுதியர்(வாக்குறுதி அளிப்பவர்/promisor) வேண்டுதலுக்கேற்பச் செய்யப்படும் செயல்கள். இவற்றால் உறுதியருக்குத் தனிப்பட்ட பயன் இல்லை என்றாலும் நல்ல கருதுகையாக எண்ணப்பட்டுச் சட்டத்தாலும் செயற்படுத்தப்படுகிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply