(முன்னிதழ்த் தொடர்ச்சி)

பிரபாகரன்04

பிரபாகரன்04

. . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . .

-மாவீரர் நாள் உரை – 2004

நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல்  விழைவுகளின் ஆர்ப்பரிப்பு வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகு மக்கள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.  அண்மைக் காலமாகத், தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த்

தேசிய எழுச்சி நிகழ்வுகளிற்  பெருங்கடலாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.

தன்னுரிமை கோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியல் விடுதலை வேண்டித், தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சான்றின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒரே இலக்கில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைப் பன்னாட்டுக் குமுகாயம் இனியும் புறக்கணிக்க முடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே  வரையறுத்துக் கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் மன்பதை என்ற வகையில்,

தமது அரசியல் விழைவுகளைப் பன்னாட்டுக் குமுகாயம் ஏற்க வேண்டும் என்பதே எமது

மக்களின் அறைகூவலாகும்.    . . . . . .

ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் தன்னுரிமைக்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது தன்னுரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள்.  தன்னுரிமை என்பதே  தானாக,எவ்வகைக் கட்டுப்பாடின்றி, மற்றவர்களின் தலையீடின்றி,எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.

தமிழரின் தேசியத் தனித்துவத்தை  ஏற்று, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து,

அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை  விடுதலையடைந்த காலம்

தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுப், புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர்.

– மாவீரர் நாள் உரை – 2005

  .  . . . மாறாக, எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த அமைதிக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்டகாலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகிறது. பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு, தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறைவைத்திருக்கிறது. எமது மக்களின்  விடுதலையைப் பறித்து,

அவர்களது  குமுகாய வாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்துவைத்து,

அவர்களது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப்படுத்துகிறது. தமிழரின் தாயகத்தைப் பகுதிகளாகப் பிரித்து, வலயங்களாக வகுத்துப் படை அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டுச் சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு  பேரண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.

– மாவீரர் நாள் உரை – 2006