அடிப்பாய் நீச்சல் உன்கையாலே!

வந்தது போகும் வருவதும் போகும் வாழ்நாள் முழுவதும் வருவதும் போகும்

துன்பங்கள் போகும் துயரங்கள் போகும் துய்க்க மறந்தன பலவும் போகும்

ஏழ்மையும் போகும் இன்பங்கள் போகும் இருந்து களித்த சுகங்களும் போகும்

போகும் போகும் புகுந்தன போகும் புதிதாய் வந்தன பழையதாய்ப் போகும்

இளமை போகும் இருந்து உழைத்த உறுதியும் போகும் இல்லாதிருந்த மாற்றங்கள் வாழும்!

படைத்தன போகும் பகைகளும் போகும் பழியென சுமந்த காலமும் போகும்

அப்படி அப்படி ஆட்சியில் உலகம் அதனுள் இருந்து பழகிடு உவந்தும்

விட்டால் போகும் விடுகதை போலே விதைத்தால் விளையும் நெல்பயிர் போலே..

போட்டால் முளைக்கும் மூலத்தைப் போலே முடிந்தால் கட்டு வானத்துமேலே

அறிந்தால் இனிக்கும் அதன் சுவை போலே அடிப்பாய் நீச்சல் உன்கையாலே!

வாட்டம் போகும் வரும் மழையாலே வளங்கள் தேங்கும் தொடர்கதையாக!..

பாவலர் மு இராமச்சந்திரன்

தலைவர்

தமிழ்த் தன்னுரிமை இயக்கம்