(காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)

காலத்தின் குறள் பெரியார்

அதிகாரம் 8. பொதுவாழ்வு

 

1.அக்காலம் போலவே இக்காலம் இல்லென்பார்

  எக்கா லமுமறி  யார்.

2.புத்துலகு காணப் புறப்பட்டார்  ஈட்டுவது

  நித்தமும் நிற்கும் புகழ்.

3.வாழ்வாங்கு வாழ நமக்கோர் வழியுண்டா

  சூழின் அதுபொது வாழ்வு.     

4.பொன்னை இழந்து பொருளிழந்து தன்னை

  இழக்கவைக் கும்பொது வாழ்வு.

5.செல்வமது கிட்டும் எனப்பொது வாழ்விற்குச்

  செல்லா(து)  இருத்தல் சிறப்பு.

6.புதுவாழ்(வு) எதுவென்பார்க்(கு) என்றும் நிலைக்கும்

  பொதுவாழ்வே என்று புகட்டு.

7.தான்வாழ வேண்டுமென வந்தாரை நீமறித்து

  ஏன்வாழ வேண்டும் இயம்பு.

8.பொதுவாழ்வால் வாழ்விழந்தேன் என்பாரைச் சீறி

  இதுநாவா என்றுமிழ் வாய்.     

   9.உடன்பிறந்தார் மட்டுமல்ல ஊருனைப் போற்றக்

  கடன்செய் உனைமறந் தே.                                                  

  10.புத்துலகு தோன்றப் பொதுவாழ்வில் மாண்டவர்

   செத்துமுயிர் வாழ்பவர் தான்.

 

(தொடரும்)

ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:

காலத்தின் குறள் பெரியார்