காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)
காலத்தின் குறள் பெரியார்
அதிகாரம் 7. தொண்டறம்.
1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல்
கற்றார்க்(கு) உரிய அறம்.
2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக்
கொண்டறம் பேணிவாழ் வோம்.
3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே
எதிர்பார்க்கும் தொண்டாம் அறம்.
4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை
வள்ளுவன்கோல் கண்ட அறம்.
5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி
எழச்செய்வோம் தொண்டறத் தால்.
6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம்
அறத்தொண்டால் வெற்றிகாண் போம்.
7.தடியூன்றித் தந்தை தளர்வின்றிக் காத்தார்
மடியின்றிக் காத்துநிற் போம்.
8.வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனுமுரையைச்
சொல்லாலே வெல்வ(து) அறம்.
9.இல்லாமை நீக்கியே எல்லோருக் கும்உரிமை
வெல்வோம்நாம் தொண்டறத் தால்.
10.இல்லறம் ஏற்கும் துறவறம் ஈதிரண்டை
வெல்லறம் தொண்டறம் தான்.
(தொடரும்)
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:
காலத்தின் குறள் பெரியார்
Leave a Reply