பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி)
காட்சி – 13
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : மரக்கிளை
நிலைமை : (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப்
பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!)
ஆண் : அழகிய பேடே! பார்த்தாயா?
அன்பு மனைவியின் பணிவிடையை!
பெண் : விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்!
பார்க்க அழகே! எனச்சொல்வேன்!
(என்றே மேடையை நோக்கிய பின்)
அதோ! அதென்ன ஒரு கும்பல்!
நின்றே கூட்டத்தின் நடுவினிலே
உரக்கக் கத்திப் பேசுவதேன்?
ஆண் : பேடை இப்படிக் கூறியதும்
ஆண்சிட்டு கூட்டத்தைப் பார்த்துவிட்டு
தாடையை சற்றே நீவிவிட்டு
ஆய்! அதென்ன! எவரேனும்
கல்லால் மேடையை நோக்கியே
ஏய்! என்றே எறிந்திருப்பார்!
சொல்லால்விட்டால் மேடைக்குச்
செல்லாதென்பது அவர் எண்ணம்!
பெண் : (என்றதும் பேடையோ முகம் திருப்பி)
எதுவாய் இருந்தால் நமக்கென்ன?
நன்றே இவர்கள் பேசுவது
காதில் விழுவதால் கேட்டிடுவோம்!
(பாடும்)
Leave a Reply