eezham-genocide05

உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை

விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும்

வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட

கற்ற கரும்புலி காடையர் பிடியில்

சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட

புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை

கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய்

வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய்

சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்

 ltte-march01

மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய்

சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத்

தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே

தோற்ற மறியா தொல்குடி வேந்தரே!

கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும்

முற்றாய் எழுகவே முள்ளி வாய்க்கால்

நாற்றாய் முளைத்து நஞ்சகரை முடிக்கும்

காற்றாய்க் கனல்புனல் கலந்தக் கருவியாய்

ஏற்றம் கொண்டிட இன்றே கிளர்கவே!

 parani-paavalan02