அரசு இராணி மேரிக்கல்லூரியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழா
சென்னை, அரசு இராணி மேரிக்கல்லூரியில் (ஐப்பசி 05, 2047/அட்டோபர் 21, 2016 அன்று) இலக்கியமன்றத் தொடக்கவிழா நடைபெற்றது.
முதல்வர் முனைவர் இராச சுலோசனா தலைமை தாங்கினார்.
த.து.த. முனைவர் கலைவாணி வரவேற்புரை யாற்றினார்.
முனைவர் உலோக நாயகி அறிமுக உரை வழங்கினார்.
மேனாள் முதல்வர் முனைவர் இ.மதியழகி இலக்கியமன்றத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை யாற்றினார். தம் உரையில் அவர், ‘இலக்கியம் காட்டும் நன்னெறி’ குறித்துச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
மாணவி தமிழ்மொழி நன்றி நவின்றார்.
முனைவர் ஏமாரசினி ஒருங்கிணைத்துத் தொகுப்புரை வழங்கினார்.
படங்கள் : கமலமுருகன்
Leave a Reply