எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு
கிளிநொச்சி சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி முதலியன அன்பளிப்பு.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமக்கான சில அடிப்படை உதவிகளைச் செய்து தருமாறும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதனை எமது புலம்பெயர் அமைப்பான எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE)-இன் கவனத்தித்திற்குக் கொண்டு சென்றதையிட்டு, அவர்களின் இல்லத்திற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள், இயன்மருத்துவப் பிரிவிற்கான கட்டடம், ஒரு மாதத்திற்குத் தேவையான குழந்தையர் இடைத்துணி மற்றும் நிருவாக ஊழியர்களுக்கான யூலை மாதக் கொடுப்பனவு என உரூபாய் 326,815 எமது சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
1 ஆம் கட்டம்
இல்லப் பிள்ளைகளுக்கு 32,985உரூபா பெறுமதியான 15 தலையணைகள், 15 துண்டு, 15 படுக்கை விரிப்புகள், 15 நுளம்பு வலை, 30 சிறிய வாளி, 2 பெரிய வாளி, 15 தலையணை உறை, என்பன வழங்கப்பட்டுள்ளன.
2 ஆம் கட்டம்
இயன்மருத்துவப் பிரிவிற்கான கட்டடம். கட்டடத்திற்கான பொருட்கள் கொள்வனவு – 106710 உரூபா கட்டடத்திற்கான கூலி , பிற செலவு 66560 (வங்கி வைப்பு) விளம்பர முகப்பிற்கான செலவு 3600உரூபா என்பன வழங்கப்பட்டுள்ளன.
3 ஆம் கட்டம்
பிள்ளைகளுக்கான ஒரு மாதத்திற்கான குழந்தையர் இடைத்துணி 30,560 உரூபா.
4ஆம் கட்டம்
நிருவாக ஊழியர்களுக்கான யூலை மாதக் கொடுப்பனவு 90,000உரூபா, எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) அமைப்பினால் எமது சங்கத்தின் ஊடாக 4 கட்டங்களாக 326,815உரூபா பெறுமதியான பொருட்கள்-நிதி என்பன இதுவரைகாலமும் வழங்கப்பட்டுள்ளதுடன். ஏதிர்காலத்தில் 100 பிள்ளைகளைப் பேணுவதற்குக் கிளிநொச்சி சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பிற்கான நிலையான கட்டடம் அமைப்பதற்கான ஒழுங்கமைப்புக்களும் எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply