(தமிழ்ச்சொல்லாக்கம்: 340 – 341 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 342-344
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
342. நவநீதகிருட்டிணன் - வெண்ணெய்க்கண்ணன்
இது மகா-ள-ள-சிரீ பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது.
நூல் : சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் - 4.
நூலாசிரியர் : மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்.
நூலைப் பரிசோதித்தவர் : பிரசங்க வித்துவான் ...