(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 6 தொடர்ச்சி
இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ...