(அகல் விளக்கு – மு.வரதராசனார். 15. தொடர்ச்சி)
அகல் விளக்கு
'இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்' என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.
காவலாள் சொக்கானும், 'சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்' என்றான்.
'புருடை என்றால் என்ன?'
'சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது'
'அதை என்ன செய்வது?'
'அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே ...