சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக
இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்!
அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
இடம்: இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை.
காலம்: தி.பி. 2048 - சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி
தலைமை : தோழர் கி. வேங்கடராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது.
அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், ...