image-21432

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா ஒளிப்படங்கள்

தை 24, 2047 /  பிப். 07, 2016 திருவண்ணாமலையில் திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம் 100, மொழிப்போர் 50, மொழிஞாயிறு பாவாணர் 114 ஆகிய   முவ்விணை விழாவின் பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள்.  தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன்
image-21428

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா? – சி.இலக்குவனார்

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா?   கல்வியும் செல்வமும் உடைய தமிழர்கள் தாமுண்டு தம்வாழ்வுண்டு என்று கூற்றுவனுக்கு நாளோட்டுகின்றனரேயன்றித் தமிழினப் பெருமையை எண்ணிச் செயலாற்றும் இயல்பைப் பெற்றிலர். அன்று வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த வடவரை அடக்க வலிதிற் சென்ற செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி ...
image-21425

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்: இரா.பி.சேது(ப்பிள்ளை)

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் - பெயர்க் காரணம்  குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், ...
image-21420

சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி

சேரர் - சொல்லும் பொருளும்   இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.   கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.   ...
image-21403

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்               இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயல் அமைப்பின் செய்தி:   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி ...
image-21413

புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 1/3

1   சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி ...
image-21396

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள் கூடல் (மதுரை) பொய்யா விழாவின் கூடற் பறந்தலை – அகநானூறு: 16:14 கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது அகநானூறு:149: 14 யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல் பரிபாடல் : 10:40 4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல் பரிபாடல் : 10: 112 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல் பரிபாடல் : 10:12 கூடலொடு பரங்குன்றினிடை பரிபாடல் : 17: 23 கொய்யுளை மான்தேர்க் ...
image-21409

பட்டினிப்போட்டுக் கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலக்கணமா?

விடுதலை ஒன்றே தீர்வு! எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு!   தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, பன்னாட்டுப் பெண்கள் நாளாகிய 2016 மார்ச்சு 08 அன்று வவுனியா பொங்குதமிழ் ...
image-21305

2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா (4 நாள்), காரைக்குடி

  காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருட்டிணா திருமண மண்டபத்தில்  வரும் பங்குனி 08, 2047 / 21.3.2016 முதல் பங்குனி 10, 2047 / 23.3.2016 வரை நடை பெற உள்ளது. பங்குனி 11, 2047 / 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் ...
image-21361

மக்கள்நலக் கூட்டணி வலைத்தள விவரங்கள்

  மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.   மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் - காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள், ...
image-21371

சாதி நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது! – சி.இலக்குவனார்

பிறப்பு (சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது!   சாதிகளைப் போற்றும் சங்கங்கள் இருத்தல் கூடாது; அவற்றைத் தடுத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். இந்நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து மக்களாட்சி வெற்றி பெறாமல் செய்துவரும் தீமைகளுள் தலையாயது சாதிமுறையேயாகும். சாதிகள் ஒழிந்தாலன்றிச் சமநிலை மன்பதைஉருவாதல் ஒருநாளும் இயலாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ...