image-28048

மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! – அண்ணா

மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு!   மகிழ்ச்சியே மயக்கம்;  மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் ...
image-28044

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு!  அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும்.   எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட ...
image-28041

பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவல் – ஈழத்து நிலவன்

  பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு.   பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும்.   ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். ...
image-28036

திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 112.நலம் புனைந்து உரைத்தல்   தலைவியின் நலம்மிகு அழகைத்,  தலைவன்  மகிழ்ந்து பாராட்டியது.         (01-10 தலைவன் சொல்லியவை) 'நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும்,       மெல்நீரள் யாம்வீழ் பவள்'.   'மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள்          மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”. ...
image-28039

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4  பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை ...
image-28034

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7     'பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி' குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் ...
image-28028

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) - தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல்   வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு ...
image-28030

திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை

கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு     தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.   நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.   சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ...
image-28024

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)  அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும்   ஊக்கத்திற்கும் ...
image-28020

‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்

(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ' திருத்தமிழ்ப்பாவை' - பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் 'திருத்தமிழ்ப் பாவை'யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் ...
image-28015

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை           அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார்.    இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் ...
image-28013

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும்    மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ...