image-19431

பொலிக நும் வினையே!

பொலிக நும் வினையே!  இன்றே, பொலிகநும்வினையே, பொலிகநும் வினையே நாணனி கொண்ட நன்னுதல் அரிவைக்கும் பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும் மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய புனையீ ரோதிக்கும் பொலிக நும் வினையே! – விருத்தியுரைகாரரைப் புகழ்ந்த பாடல்
image-19581

எது பொங்கல்? – பாவலர் அன்பு ஆறுமுகம்

வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல் வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல் தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல் தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல் உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல் ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல் கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல் கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்! ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல் ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல் போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல் போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல் மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல் மடமையிருள் ...
image-19562

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 தொடர்ச்சி) 05 நாடு காப்பாய்!   வீரம், வலிமை, துணிவு எல்லாம் எவற்றுக்காக? உலக உயிர்களின் துயர்துடைக்கவும் புவியைக் காக்கவுமதானே! பாரதவீரர் மலிந்த நன்னாடு மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு (பக்கம் 23 / எங்கள்நாடு) என்றும் உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு(பக்கம் 45 / செந்தமிழ்நாடு) என்றும் வீரம் நிறைந்த நாடு எனக் கூறுவதன் நோக்கம் என்ன? எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச் சுதந்தரம் பூண்டதுவாகி இன்னுமோர் ...
image-19376

கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக! – பரிதிமாற்கலைஞர்

  தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம். இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. ...
image-19333

வாழி நெஞ்சே! – வளையாபதி

 நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக்கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே ...
image-19329

பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்! – மாணிக்கவாசகர்

பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக அறமுதல் அரியெனும் அவனே பரனே அணுவினுள் அவனே செகமுணர் பரனே மனனே கரிசொல வருபுயல் பரனே அமுதரு ளினனே யவனே பரனே நிலனே வானே நிறைமுதல் பரனே வலனே தரிதிகி ரியனே பரனே இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப் பொன்னடி பணிபவர் புகுபதி பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம் நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன்ஆய மைந்தனோடு ...
image-19327

எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு

அறிவொளி இறைவா போற்றி போற்றி அம்மை யப்பா போற்றி போற்றி எந்தாய்த் தமிழே போற்றி போற்றி எந்தை நாடே போற்றி போற்றி தெய்வப் புலவா போற்றி போற்றி திருத்தகு குருவீர் போற்றி போற்றி திருவெலாந் தருவீர் போற்றி ஓம்! – திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி
image-19373

பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் வேறுபட்டால் தமிழ் வழக்கற்றுப் போகும்! – பரிதிமாற்கலைஞர்

    தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு ...
image-19429

யாவும் நீ! – தாயுமானவர்

யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்             கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை             என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;             துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;             ஆவி, யாக்கை நீதானே !   தாயுமானவர்: சொல்லற்கரிய: 5
image-19383

நூலறிமுகம் – நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)

நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்) ஆசிரியர்: ப.அருளி  வேரியம் பதிப்பகம்  ஒரு தொகுதி: உருவா 300 இரண்டு தொகுதிகள் : உருவா 500  பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்... எதற்காக? என்ன பொருளில்? ...