image-19410

சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016  முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய  
image-19260

வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்

தாந்தித்திமி தந்தக்கோனாரே தீந்திமித்திமி திந்தக்கோனாரே ஆனந்தக்கோனாரேஅருள் ஆனந்தக்கோனாரே ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன் அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன் மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்) பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே. வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.'' – அகப்பேய்ச் சித்தர்
image-19285

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி

மார்கழி 22 - 24,  2046 / சனவரி 07 - 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்
image-19355

தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்

'தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?' என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. ...
image-19281

தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்

தமிழர் திருநாள் 2016 - பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில்   தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில்   நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் ...
image-19353

நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் ...
image-19350

தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை

தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. 'மண்ணும் இமையமலை எங்கள் மலையே' என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். 'கங்கையும் காவிரியும் எங்கள் நதியே' என்று இறுமாந்து பாடினான் தமிழன். 'பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே' என்று நெஞ்சம் ...