image-9474

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்   பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் ...
image-9472

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்! சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க ...
image-9443

கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்

கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால்   தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் ...
image-9467

கலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl and Shrink

  17 சுரியலும் செதுவும்–Curl and Shrink சுரியல்(௫): சுரியலம் சென்னிப் பூஞ்செய் கண்ணி (பதிற்றுப்பத்து ௨௭.௪)  அரியல் வான்குழல் சுரியல் தங்க (புறநானூறு ௩௦௭.௬) இவற்றுள் சுரியல் என முடிச் சுருள் குறிக்கப் பெறுகின்றது. இலைச்சுருளைக் குறிக்க leaf curl - இலைச் சுருக்கு (வேளா.) என்கின்றனர். சுருக்கு என்று சொல்வதைவிடச் சுரியல் என்பது மிகப் பொருத்தமாக அமைகிறது. இலைச்சுரியல் - leaf ...
image-9463

கலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate

  16: விந்துச்சுரப்பி - Prostate   பிராசுடேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்குக் கீழே ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே இச்சுரப்பி உள்ளது. நெல்லிக்காய் அளவு உள்ள இதன் எடை 7 முதல் 16கல்(கிராம்) ஆகும். இதன் வேலை ஆண் உயிரணுக்களைக் கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களைச் சுரப்பதாகும். ஒருசார் ஆண்களுக்கு 50 அகவை கடந்த ...
image-9440

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ

தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ - உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் ...
image-9437

தேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல்

தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் உளுந்தம்பருப்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் கடந்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் வாங்கினார்கள்.   தற்பொழுது தைப்பொங்கல், கிறித்துமசு, ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்குவார்கள் ...
image-9435

மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு

மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு   தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் ...
image-9433

இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்

தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென ...
image-9429

பகுத்தறிவைத் தூண்டுவன புத்தகங்களே!

புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன.           வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்    கரூர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு               வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற 'சந்திப்பு' சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன ...
image-9423

அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்

மண்டையோட்டுப் போராட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் அகழ்களங்களால் (கல்குவாரிகளால்) பாதிப்படைந்த மக்கள் மண்டை ஓட்டை வைத்து அகழ்களங்களை முற்றுகையிட்டனர். மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 அகழ்களங்களும், கல் உடைப்பான்களும் இயங்குகின்றன.. உரிமை நிலங்களை விலைக்கு வாங்கி ...
image-9405

வத்தலக்குண்டு நகரில் கலை இலக்கிய மாலை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் கலை இலக்கிய மாலை   திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் வானொலித்திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாகக் கலை இலக்கிய மாலைமார்கழி 5, 2045 / 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், ஊரகக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரம்பரைக் கலையான ...