image-13915

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    தந்தையர்நாள் எண்ண ஓட்டம்   உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.”   (திருவள்ளுவர், திருக்குறள் 70) என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை ...
image-13726

மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா – நிகழ்ச்சிப்படங்கள்

ஆனி 02, 2046 /21.06.201 ஞாயிறன்று சென்னை உமாபதி அரங்கத்தில் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. (பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்) நிகழ்ச்சி விவரம்
image-13718

கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

 கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) - 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் - வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன. திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.  இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.  விழா ...
image-13815

காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி

   மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை ...
image-13911

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..? – நவீன் பிரகாசு

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..? எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..? இலேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளாத் துயிலில்... அம்மா செல்லமா அப்பா ...
image-13768

தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர்.   மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை ...
image-13810

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

தொல்காப்பியர் சிலை0 குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம்  தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை ...
image-13765

சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கான பரிசுப் போட்டி

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான 10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம். நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம். கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், ...
image-13908

எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்

  கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.   விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என ...
image-13818

திராவிடத்தை வென்றிடுவோம்! தமிழியத்தை ஊன்றிடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் ...