image-13619

துபாயில் கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா          கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) 'காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்' என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் ...
image-13603

தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்

  தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.   ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் ...
image-13615

சீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்

   அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், ...
image-13601

உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்

  தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் ...
image-13211

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, ...
image-13575

நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பலகை வைப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாட்டை நினைப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் ஈழத்தைக் காப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் உலகத்தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் இந்தியத்தை ஏற்கிறேன்!
image-13352

கவியரசு கண்ணதாசன் விழா – சென்னை(வாணி மஃகால் – தியாகராயநகர்)

  ஆனி 06, 2046 சூன் 21, 2015 ஞாயிறு மாலை 6.00 கடந்த கால் நூற்றாண்டாக - கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) கவியரசர் புகழ் பாடி வருகிறது.   இவ்வாண்டும் அழைப்பிதழில் உள்ளவாறு விழா நடைபெற உள்ளது. கவியன்பர்களும் திரையிசை அன்பர்களும் நண்பர்களுடன் வருமாறு வேண்டுகின்றோம். கவிஞர் காவிரிமைந்தன்  நிறுவனர் - பொதுச்செயலாளர்  கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்  பம்மல்,  சென்னை 600 075 தற்போது - ...
image-13337

தமிழையே பேசுக! தமிழையே சிந்திக்க!- மாகறல் கார்த்திகேயர்

தமிழை முன்னே நீ கற்க; நின் மகனுக்குக் கற்பிக்க; எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க; கற்பிக்க; கேட்க; கேட்பிக்க; இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசற்க; புகழ் நிமித்த மாகவும் பொருள் நிமித்த மாகவும் ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது; எப்போதும் தமிழையே தெய்வம் போலவும் நற்றாய் போலவும் சிந்திக்க; நீ தமிழ் மயம் ஆனால் நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்; நின்குடியும் தமிழ் மயமாகும். நின் கை தமிழ்நூல் எழுதுக நின் வாய் தமிழையே பேசுக நின் மனம் தமிழையே சிந்திக்க நோய் கொண்டு ...
image-13330

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்

திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, ...
image-13341

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் – 1

(தொடர் கட்டுரை)   தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்களுக்குச் செலவில்லாத எளிய வழியில் அரசிடமிருந்து வேண்டிய செய்திகளை/ புள்ளிவிவரங்களை, அவரவர் தேவைக்கேற்ப அறிய உரிமை அளிக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு உரிய துறையில் தகவல் அளிக்காவிட்டால் குறிப்பிட்ட அதிகாரி தண்டத்தொகை கட்டவேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின்படி 2014 ஆம் ஆண்டு மத்திய செய்தி அளிக்கும் ஆணையாளர் மாதபூசி சிரீதர் ...
image-13325

நா தமிழே பேசுக! இறகு தமிழே எழுதுக! – சுப்பிரமணிய சிவா

  தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரத புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் ...