image-13323

திருக்குறள்போல் ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லை – நாமக்கல் கவிஞர்

  உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லா திருக்கும். அதுமட்டுமன்றி ...
image-13318

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை

தமிழ் மக்களைப் போற்றுவோம்! - புலவர் குழந்தை  கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப் பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம் - புலவர் குழந்தை : இராவண காவியம்  
image-13315

தாழ்ந்த தமிழனே! – அறிஞர் அண்ணா

  தமிழர், தனி இனத்தவர், பன்னெடுங்காலம் பண்புடன் வாழ்ந்து, பாரோர் புகழ வாழ்ந்து, கலைச் செல்வங்களைக் கண்டவர். இந்தியா எனும் உப கண்டத்திலே பல இனங்கள், தத்தம் கலைகளுடன் உள்ளன. தமிழ் இனத்துக்குத் தனிக்கலை ஒன்று உண்டு. வெவ்வேறாகவும், தனித்தனியாகவும் தனிப்பண்புகளுடன் விளங்கி வந்த ஆரிய திராவிடக் கலைகள் கலக்க நேரிட்டது ஒரு பெரும் கேடாக ...
image-13313

“அந்தணர் என்போர்….” – புலவர்மணி இரா. இளங்குமரன்

   தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, ...
image-13311

இலக்கு வழங்கும் அறிவுநிதி விருது & முத்திரைத் தொடர்

ஆனி 2, 2046 -  சூன் 17, 2015 வணக்கம். நலம். வளம் சூழ வேண்டுகிறோம். இளைய தலைமுறையின் நலனில் அக்கரை கொண்ட 'இலக்கு' , ஏற்றுமதி - இறக்குமதித் துறையில் ஏற்றம் காண அன்புடன் அழைக்கிறது..   என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி j;
image-13301

மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா

பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆனி 02, 2046 /21.06.2015  
image-13357

14ஆவது தமிழ்இணைய மாநாடு, சிங்கப்பூர்: சில நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்

வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த 14 ஆவது தமிழ்இணைய மாநாட்டின் தொடக்கவிழா, இரண்டாம் நாள் விருந்து,  நிறைவு விழா, மூன்று நாள்களிலும் நடைபெற்ற உரைகள் சிலவற்றின் நிகழ்வுப் படங்கள். படங்கள் - அகரமுதல & ஓம்தொலைக்காட்சி
image-13201

இறைவனும் இயவுளும் – பரிதிமாற்கலைஞர்

    உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும் உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குவதனால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லா வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை வலியுறுத்தினர். இன்னஉரு, இன்ன நிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற்பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்து உணர்ந்து வழிபடுதல் வேண்டி வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் ...
image-13193

சங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர்

  ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது ...
image-13772

தமிழை விலக்கும் தனிப்பிரிவு

தமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு    தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே ...
image-13188

சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்

சங்காலப் பாடல்கள் கற்பனை ஆதிக்கம் கொண்டவை அல்ல. எதார்த்ததில் ஊறி நிற்பவை. அந்நாள் வாழ்க்கையும் இன்று போல் சிக்கலான வாழ்க்கை அல்ல . இயற்கையோடு இயைந்த எளிய சிக்கல் குறைந்த வாழ்க்கை. “வள்ளுவனின் கருத்துப் புரட்சியை இன்றைய உலகத்தில் தலைசிறந்த தத்துவஞானிகளுள் பெருமதிப்புப் பெற்றுள்ள ஆல்பர்ட்டு என்ற சிந்தனையாளர் தமது “இந்தியச் சிந்தனையும், அதன் வளர்ச்சியும்'   ((Indian ...
image-13170

இசைச்சொற்கள் அன்றும் இன்றும்

   இன்று ‘உச்சஃச்தாயி', ‘மந்திரஃச்தாயி', மத்திமஃச்தாயி' எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்' எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று ...