image-12897

தமிழா படி! தமிழில் படி! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழா படி! தமிழில் படி! படி... படி முயன்று படி முன்றேனப் படி! முப்பால் படி! படி... படி ஆழ்ந்து படி! ஆய்ந்து படி! அறம் படி! படி... படி பொதுமை படி! புரட்சி படி! பொருள் படி! படி... படி இனிது படி! இயற்கை படி! அகம் படி! படி... படி புரிந்து படி! புரியப் படி! புறம் படி! படி... படி நன்றாய்ப் படி! நயமாய்ப் படி! நாலடி படி!. படி... படி நிறையப் படி! நிறைவாய்ப் படி! நீளப் படி! படி... படி தேர்ந்து ...
image-12895

தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்

 நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும் ஆளுமைசெயும் தமிழே! போர்ப்பாட்டுப் பாடுதற்குப் புறப்பட்ட பூந்தமிழே! பொறுமையுடன் நடனமிடும் புதிரான தமிழே! பெருமையுடன் வாழ்த்துகிறேன்! பெருமிதமும் கொள்கின்றேன்! வந்தாரை வாழவைக்கும் வளமான செந்தமிழே! சொந்தமெனும் உணர்வோடு சொக்குகிற தமிழே! சிந்திக்கத் தெரிந்தவர்க்குச் சிரிக்கின்ற தமிழே! நிந்திக்கத் தெரியாத .நிலைத்தபுகழ்த்தமிழே! சொல்லில் அடங்காத சொல்லடுக்குத் தமிழே! பல்சுவையில் குன்றாத பழம்புகழே! பார்முதலே! வெல்கின்ற வழியெமக்கு விழிப்புடனே தந்திடுவாய்! நல்லோனாய் இருந்திடவே நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! - கவிஞர் முத்தரசன்
image-12893

இனியொருநாள் வந்திடாதா? – சாப்டூர் சதுரகிரியான்

இனியொருநாள் வந்திடாதா? தமிழர் எல்லாம் எழுச்சியுற்றே செந்தமிழில் பேசி டாரா? கனியிருக்கக் காய்தின்னும் போக்கை மாற்றிக் கனிமொழியாம் நற்றமிழில் கற்றி டாரா? தனித்தமிழால் கல்விகற்றே உயர்ந்தி டாரா? சங்கக்காலம் மீண்டெழுந்தே வந்தி டாதா? இனித்திடும்நல் இலக்கியங்கள் தோன்றி டாதா? இனியேனும் தமிழினமே விழிப்பு கொள்வாய்! தமிழ்மொழியை மறக்கடிக்கும் மழலைப் பள்ளி தமிழர்க்குத் தேவைதானா? தமிழில் கற்றால் வாய்ப்பின்றி வாழவழி யற்றுப் போமோ? மறத்தமிழன் யாமென்று சொல்லல் பொய்யோ? வாய்கிழிய தமிழ்மொழியை வாழ்த்தி விட்டு மாற்றானின் ...
image-12884

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழனே இது கேளாய் -- உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே இது கேளாய்! தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு! கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. தமிழனே இது கேளாய்! வஞ்சகர் வந்தவர் தமிழாற் ...
image-12880

திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)

திருக்குறளும் தொடர்பாடலும்   தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ...
image-12877

முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய  வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!  பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்  முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!  கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற  வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ...!  ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும்  இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ...!  ஐயோ உலகே! ஐயகோ பேருலகே!  பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?  கையேந்தி வந்தாரைக் ...
image-12907

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  
image-12992

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை ...
image-12868

முதியோர் கொலை – வைகை அனிசு

 பெண்குழந்தைக்கொலைபோல்  முதியோர் கொலை தொடரும் பேரிடர்!   'வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ' என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய   ...
image-12848

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு  கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு ...
image-12865

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் ...
image-12861

போதை – மரு.பாலசுப்பிரமணியன்

பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும் பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும் மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும் போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை நெஞ்சினிலே துயரம் ...