image-12069

கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

புற்றுநோய்வெருளி  புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia   புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ...
image-12067

கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia

புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் ...
image-12050

தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே - வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே - வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே - வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! - வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! - பாவேந்தர் பாரதிதாசன்
image-12065

கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia

பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia   faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia   புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), ...
image-12048

தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்

நன்று தமிழ் வளர்க! - தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! - கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! - பாவேந்தர் பாரதிதாசன்
image-12034

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி - 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற 'காணோமே எனது பெண்ணைத்தான்'' கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் ...
image-12063

கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia

பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia   13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 145 பயிர் வெருளி-Botanophobia பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் பயிர் வெருளி-Botanophobia - இலக்குவனார் திருவள்ளுவன்
image-12046

தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் ...
image-12054

கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia   படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி ...
image-12015

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1)      2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி  மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் ...
image-12043

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்

எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான ...
image-12012

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - ...