(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)
காட்சி இரண்டு
வால்மீகி ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்
இலட்சுமணன்: (சீதையைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டா!. உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் ...