image-10930

குள்ளப்புரம் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு

 தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.   குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். ...
image-10954

கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia

90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை ...
image-10952

கலைச்சொல் தெளிவோம்! 89. இருள் வெருளி

 89. இருள் வெருளி- Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1) என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10) அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1) குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் ...
image-10950

கலைச்சொல் தெளிவோம்! 88. ஆழ்பு வெருளி

 88. ஆழ்பு வெருளி-Bathophobia  ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் ...
image-10878

மாயாண்டிபாரதி என்னும் வரலாறு – பாலா, தமிழக அரசியல்

  ‘‘ஏறினா இரயிலு... இறங்கினா செயிலு!’’ - மாயாண்டி பாரதி என்ற சரித்திரம் மாயாண்டி பாரதி... மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.   இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார்.   மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் ...
image-10948

கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி

87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ ...
image-10943

கலைச்சொல் தெளிவோம்! 85 & 86. அழுக்கு வெருளி & குப்பை வெருளி

 85. அழுக்கு வெருளி - Automysophobia/Mysophobia 86. குப்பை வெருளி-Rupophobia 'அழுக்கு' என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல். புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன. தூய்மையின்மை அல்லது ...
image-10941

கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia

 84. அழிவுவெருளி-Atephobia  அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய ...
image-10938

கலைச்சொல் தெளிவோம்! 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள்

80-83  கூர்மை தொடர்பான வெருளிகள்  கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக் குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9) கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும் சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ...
image-10936

கலைச்சொல் தெளிவோம்! 79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia

79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia அயலார் + வெருளி அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய அயலார் வெருளி-Xenophobia/Zenophobia - இலக்குவனார் திருவள்ளுவன்
image-10866

கெ.கல்லுப்பட்டியில் கிடைத்த கோபுரக் கலசம்

கெ.கல்லுப்பட்டியில் '100 நாள்' வேலை பார்க்கும் போது கிடைத்த கோபுரக் கலசம்   தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வேலை செய்யும்போது சிவப்புத்துணி சுற்றிய நிலையில் கோபுரக் கலசம் இருப்பதை அப்பகுதி மக்கள் எடுத்தனர்.  கெ.கல்லுப்பட்டி பகுதி, வரலாறும் பரம்பரைச்சிறப்பும் மிகுந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் திப்பு சுல்தான், ...
image-10925

கைலாசநாதர் கோயிலில் பிறந்தநாளுக்கான பூசை

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் மக்கள் முதல்வரின் 67 ஆம் பிறந்தநாளுக்கான பூசை  மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் ...