(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
2. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
(திருக்குறள் 731)
தள்ளா-குறையாத, விளையுளும்-விளைவிக்கப்படும் பொருள்களும், தக்காரும்-விளைவுக்குக் காரணமான அறிஞரும், தாழ்வுஇலா-குறைவுஇலாத, செல்வரும்-செல்வமுடையவரும், சேர்வது-சேர்ந்திருப்பது, நாடு-நாடு ஆகும்.
‘விளையுள்’ என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள்கள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக்கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க ...