image-3235

கூற்றே உண்மை கூறு!

அன்னைத் தமிழை அரியிருக்கை அமர்த்த வுழைத்த அடலேற்றை முன்னே நுழைத்த மூடமெலாம் முறிக்க இசைத்த முறையூற்றைப், பொன்னை நிகர்பா புரிந்திசையார் புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச், சென்னை நகரில் சிறையெடுத்துச் சென்ற தேனோ சிறு கூற்றே? -           காரை. இறையடியான் - குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964
image-3232

நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே வாழ்வில் தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம் உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்பதைக்கும் உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம், கடலியக்கும் சுவைப்பாட்டே கண்ணான ...
image-3229

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

  ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்ம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள் செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன் பெருமை! வயிற்றுக்கு ஊற்றக் கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ! இளந்தமிழா குறைதவிர்க்க ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்குவிப்பாய்! ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ! பிணிநீக்க எழுந்திருநீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை ...
image-3226

நாம் தமிழர் என்று பாடு

  நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில் போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு. நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு? தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம் தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு! மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய் முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு கோவிலுக்குள் வேண்டாம் ...
image-3223

பாரதிதாசனின் சங்கநாதம்

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊது சங்கே! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் ...
image-3221

ஓயாத கவிதைத்தேன்

1. முல்லைமலர் என விளங்கு தமிழைக் காத்த மூவேந்தர் பரம்பரையின் முதல்வனானாய்! சொல்மலர வில்லையடா இறந்த சோகம்! சுட்டெரிக்கக் கனலானாய்! கவிதைத் தேனீ! எல்லையில்லாப் பெரும் பயணம் தொடங்கி விட்டாய் எரிமலையே தமிழ்காத்த வலிய கோட்டை கல்லுடைந்து வீழ்ந்ததுவோ? கால வேந்தன் கைகளினைப் பஞ்சணையாய் ஆக்கிக் கொண்டாய். 2. தூய தமிழ்க் கணையெடுத்துப் பகையை வென்று தூளாக்கித் தலையெடுத்தாய்; குயிலதாகி ஓயாத கவிதைத்தேன் ஊற்றி வைத்தாய் உன் மொழியால் தென்னகத்தார் நெஞ்சில் ...
image-3218

பாரதிதாசர்க்கு இரங்கற்பா

ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர் இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர் தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர் தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர் பாரதி தாசர் பான்மை பலப்பல பாரும் அறியும் ஊரும் உணரும் இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர் கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்? தமிழர் உணர்வறைப் போயது கண்டோ? தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ? இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ? எதனால் புத்தேன் உலகம் புக்கார்? எல்லாம் தெள்ளிதின் உணரும் இறையே ...
image-3268

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் -  சான்றிதழ்ப் படிப்பு 05.05.14 - 30.05.14  எனும் ஒருமாதக்காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் திஇராநி (எசுஆர்எம்) பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.   கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் ...
image-3264

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

சங்கக் கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் - ஓர் அறிமுகம் உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினர்கள் உரை: திருமதி.செல்வம்  சிரீதாசு திருமதி. (இ)லீலா சிவானந்தன் திரு. அருள் சுப்பிரமணியம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:சித்திரை 13, 2045 / 26-04-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
image-3184

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து ...
image-3174

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்.

  பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும் சிட்டுக் குருவிகள்; குருவியின் கூரிய மூக்குப் போல ...
image-3209

வள்ளுவரும் அரசியலும் 5 – முனைவர் பா.நடராசன்

   (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 06, 2014 இதழின் தொடர்ச்சி) தெரிந்து வினையாடல்   தன் மாட்டு அன்பும் அறிவும் தனக்கென அவாவின்மையும், செய்ய வேண்டும் வினையில் துணிவுமுடையாரைத் தெரிந்து செயலில் ஈடுபடுத்த வேண்டும். அந்த வினைக்குந் தகுந்தவனை எவன் என்று கண்டு அவன் மாட்டு வினையின் ஒப்படைத்துவிட வேண்டும். சுற்றம் தழுவல்  தனக்கு அதிகாரம் வந்துவிட்டதென்று இறுமாப்படைந்து, ...