தலைப்பு-மலைபோல் பற்று எனக்கில்லை ;thalaippu_malaipoalpatru_gersom_chellaiah

மலைபோல் பற்று எனக்கில்லை!

மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும்,

மாபெரும் பற்றும் எனக்கில்லை.

கலையழகுள்ள சிலைபோல் கட்டும்,

கைத்திறன் அறிவும் எனக்கில்லை.

விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும்,

விண்ணின் அன்பும் எனில் இல்லை.

இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும்,

இறைமுன் வந்தேன், குறையில்லை!

– கெருசோம் செல்லையா